கறி சுவையில் வட்ட வடிவ உருளைக்கிழங்கு வறுவல் எப்படி வீட்டிலேயே எளிமையாக செய்வது? இது தெரிஞ்சா உருளைக்கிழங்கு வேற வகையில் ட்ரை பண்ணவே மாட்டீங்க!

- Advertisement -

உருளைக்கிழங்கு வருவல் என்றாலே அனைவருக்கும் ரொம்பவும் பிடித்தமான ஒரு டிஷ் ஆக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இந்த உருளைக் கிழங்குகளை வட்ட வடிவத்தில் கறி சுவையில் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்தா, இனி இப்படித்தான் உருளைக்கிழங்கு வேண்டும் என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கக்கூடிய வட்ட வடிவ உருளைக்கிழங்கு வறுவல் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

உருளைக்கிழங்கு வட்ட வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – ரெண்டு, நல்லெண்ணெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மிளகாய் தூள் – முக்கால் ஸ்பூன், மிளகுத்தூள் – அரை ஸ்பூன், சீரகத்தூள் – முக்கால் ஸ்பூன், தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்.

- Advertisement -

உருளைக்கிழங்கு வட்ட வறுவல் செய்முறை விளக்கம்:
முதலில் உருளைக்கிழங்குகளை கழுவி நன்கு தேய்த்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை தோலுடன் சமைப்பது ஆரோக்கியமானது தான் எனவே தோல் மீது இருக்கும் நுண் கிருமிகள் நீங்க ஒரு ஐந்து நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு வையுங்கள். பின்னர் உருளைக்கிழங்குகளை அரை இன்ச் அளவிற்கு தடிமனாக நீள் வட்டமாக வெட்டி சுத்தமான தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உடையாமல், நிறம் மாறாமல் இருக்கும். பின் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை, சீரகம், உளுந்து ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் லேசாக வதக்கிய பின்பு வட்ட வட்டமாக வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். லேசா பிரட்டி விடுங்கள்.

- Advertisement -

பின்னர் அதன் மீது தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் தூவி கொள்ளுங்கள். ஒரு முறை நன்கு பிரட்டி விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் மூடி போட்டு நாலு நிமிஷம் மீடியம் ஃப்ளேமில் வைத்து வேக விடுங்கள். பிறகு மூடியை திறந்து மற்ற மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்க்க வேண்டும். மல்லித்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி கொள்ளுங்கள்.

பிறகு குறைவான தீயில் வைத்து நாலு நிமிடம் வேக வையுங்கள். மசாலா வாசம் எல்லாம் போய் வட்ட வட்ட உருளைக்கிழங்கு மசாலாவுடன் நன்கு ஒட்டிக் கொள்ளும். அவ்வளவுதாங்க, சூப்பரான உருளைக்கிழங்கு வட்ட வறுவல் டேஸ்டியாக இப்போது தயார்! இதை வெரைட்டி ரைஸ் மற்றும் சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது ரசித்து ருசித்து சாப்பிடலாம். அவ்வளவு டேஸ்டாக இருக்கும், நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -