வண்ணக் கோல பொடிகளை தயாரிப்பது எப்படி?

colour kolam
- Advertisement -

பண்டிகை நாட்கள் என்றாலே வீட்டில் செய்யப்படும் பல சிறப்பான காரியங்களில் முதலில் தொடங்குவது வாசலில் போடப்படும் வண்ண வண்ண கோலங்கள் தான். முன்பெல்லாம் மார்கழி மாதம் முழுவதுமே வாசலில் வண்ண கோலம் போட்டு மங்களகரமாக வைத்திருப்பார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி போடுவது இல்லை. பண்டிகை நாட்களில் மட்டும் இதை தவறாமல் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் எதிர்வரும் புத்தாண்டு பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் உங்கள் வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் போடும் போது இந்த முறையில் போடுங்கள். அது பார்ப்பவரின் கண்ணை பறிப்பதாக இருக்கும். அதற்கான நிறங்களை நாமே வீட்டில் எப்படி தயார் செய்வது என்பது பற்றி தான் வீட்டுக் குறிப்பு குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வண்ணக்கோல நிறங்களை தயாரிக்கும் முறை

இந்த முறையில் வண்ண நிறங்களை தயாரிக்க கோலமாவு எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அதே அளவு பச்சரிசி மாவையும் எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த அளவுகளில் கலக்கும் போது வண்ணம் பளிச்சென்று கோலம் போடும் போதும் அழகாக இருக்கும்.

பச்சை நிறத்தை தயாரிக்க வேப்பிலை இருந்தால் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வேப்பிலை கிடைக்காத பட்சத்தில் கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலை போன்றவற்றை பயன்படுத்தலாம். இவைகளை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரில் அரைத்த பிறகு சாறை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இன்னொரு மிக்ஸர் ஜாரில் நாம் ஏற்கனவே கலந்து வைத்த அரிசி மாவும், கோலமாவையும் சேர்த்து இந்த சாறையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு முறை சுற்றி எடுங்கள். அப்பொழுது தான் நிறம் அனைத்து பக்கத்திலும் சமமாக பிடிக்கும். அதன் பிறகு அரைத்த இந்த மாவை வீட்டு நிழலில் பேப்பரில் ஆரம்பித்து எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை நிற வண்ணம் தயாராகி விட்டது.

அடுத்ததாக நீல நிறத்தை தயாரிக்க எழுத பயன்படுத்தும் இங்கை கோலமாவில் கலந்து கொள்ளலாம். அதே போல் துணிகளுக்கு பயன்படுத்தும் நீலத்தையும் கலந்து கொள்ளலாம். இரண்டும் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும். ஒன்று அடர் நிறத்திலும் ஒன்று வானம் கலரிலும் கிடைக்கும். இங்கை கொஞ்சம் அதிகமாக ஊற்றி கலந்தால் கருப்பு நிறம் கிடைத்து விடும்.

- Advertisement -

அதே போல் சிகப்பு நிறத்திற்கு குங்குமத்தை பயன்படுத்தலாம். குங்குமத்தில் கொஞ்சமாக தண்ணீர் கலந்து குழைத்து அதை கோலமாவில் ஊற்றி மிக்ஸியில் ஒரு முறை சுற்றி எடுத்தால் போதும் சிகப்பு நிற ம் தயார். தக்காளியை அரைத்து அதன் சாறை கலந்து தயாரிக்கும் போது இது வேறு விதமான சிகப்பு நிறத்தில் கிடைக்கும். ஆரஞ்சு நிறத்திற்கு கேரட்டை அரைத்து அதன் சாறை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதே போல் பீட்ரூட்டின் சாறையும் மற்றொரு நிறத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மஞ்சள் நிறத்திற்கு மஞ்சள் தூளை கரைத்து பயன்படுத்தலாம். அதே போல் ஆரஞ்சு லெமன் போன்றவற்றுக்கு சமையலுக்கு பயன்படுத்தும் புட் கலர்களை தண்ணீரில் கரைத்து கோலமாவில் ஊற்றி அரைத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்படி கலக்கும் போது தண்ணீர் கொஞ்சம் அதிகமாகி விட்டால் மாவு கெட்டிப்பட்டது போல ஆகி விடும். இது காய்ந்த பிறகு மீண்டும் ஒரு முறை மிக்ஸி ஜாரில் போட்டு எடுத்து விடுங்கள். கோலம் போட அருமையாக வண்ணப்பொடி தயாராகி விடும். இதை கலக்கும் போது நாம் கவனிக்க வேண்டியது இந்த நிறங்களை நேரடியாக அப்படியே மாவில் கலக்கக்கூடாது கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தான் கலக்க வேண்டும்.

அதே போல் வீட்டு நிழலில் தான் ஆரம்பிக்க வேண்டும் வெயிலில் காய வைக்க கூடாது. நிறங்கள் வெளியில் போய் விடும். இப்படி ஒவ்வொன்றாக அரைத்து செய்வதற்கு பதிலாக வண்ணப் பொடிகளையே வாங்கி பயன்படுத்தலாமே என்று கேட்கலாம். நமக்குத் தேவையான அனைத்து நிறங்களும் கிடைக்காது. அது மட்டும் இன்றி இதில் இரண்டு நிறங்களை ஒன்றாக கலக்கும் போது நமக்கு புதிய நிறங்கள் வண்ணப் பொடிகள் கிடைக்கும் கடைகளில் இப்படி வாங்க முடியாது.

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறை

வண்ணக் பொடி தயாரிக்கும் இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இது போல தயாரித்து புதிய பல வண்ணங்களை உருவாக்கி உங்கள் வீட்டு வண்ணக் கோலங்கள் பார்ப்பவர்கள் தன்னை கவரும்படி அழகாக போட்டு அசத்துங்கள்.

- Advertisement -