பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறை

pooja things
- Advertisement -

பூஜை பாத்திரங்கள் எப்போதும் பார்க்க பளிச்சென்று பிரகாசமாக இருந்தாலே அதை பார்க்கும் நமக்கு ஒரு வித சந்தோஷம் தான். மேலும் அந்த பூஜை பாத்திரங்களை வைத்து பூஜை செய்யும் போது மனதில் ஒரு மிக பரவசமும் நிம்மதியும் இருக்கும். அதற்காகத் தான் எத்தனை சிரமப்பட்டாலும் வாரம் ஒரு முறை இந்த பூஜை பாத்திரங்களை நாம் தேய்த்து சுத்தப்படுத்தி வைத்து விடுகிறோம்.

ஆனாலும் எல்லோர் மனதிலும் இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய எளிதாக ஒரு வழி இருக்காதா என்ற எண்ணமும் கேள்வியும் இருக்கும். ஏனெனில் வீட்டில் இருக்கும் மற்ற பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. முதலில் இதை தேய்க்கும் போது பளிச்சென்று இருக்க வேண்டும். அடுத்து எண்ணெய் பிசுக்கு நீங்க வேண்டும். இதை விட முக்கியம் சீக்கிரம் கருகாமல் இருக்க வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்வதென்றால் கொஞ்சம் சிரமம் தானே. ஆனால் இனி இந்த மூன்று வேலையும் சிரமம் இல்லாமல் சுலபமாக செய்ய முடியும். அதற்கான ஒரு எளிய வழிமுறையை பற்றி தான் வீட்டுக் குறிப்பு குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பூஜை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்யும் முறை

இந்த முறையில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய முதலில் அவற்றில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு போக ஒரு டிஷ்யூ அல்லது காட்டன் துணி வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த பாத்திரங்களை தேய்க்க நல்ல தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பூஜை பாத்திரங்களை பொருத்த வரையில் எப்போதும் நல்ல தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள் அது தான் இவை சீக்கிரத்தில் கருக்காமல் இருக்க முதல் டிப்ஸ்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் வினிகர் எடுத்துக் கொள்ளுங்கள். வினிகர் எந்த அளவிற்கு எடுக்கிறீர்களோ அதை அளவில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் சேர்த்த பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை முழுவதுமாக பிழிந்து அதன் சாறை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இது மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதோ பூஜை பாத்திரங்களை தேய்க்க நாம் தயாரித்த லிக்விட் ரெடி. இதை வைத்து பூஜை பாத்திரங்களை எல்லாம் லேசாக தேய்த்து கொடுங்கள். விளக்குகளின் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகள் போக டூத் பிரஷ் வைத்து தேய்த்து விடுங்கள். இதற்கென தனியாக ஒரு பிரஷ் எப்போதும் வைத்திருங்கள். அதன் பிறகு இதை நல்ல தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள் போதும். பாத்திரங்கள் பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -

இப்படி தேய்க்கும் போது பூஜை பாத்திரங்கள் ஊற வைக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. ஒரே ஒரு முறை இந்த லிக்விட் வைத்து தேய்த்தாலே போதும் பாத்திரங்கள் பளிச்சென்று மின்ன ஆரம்பித்து விடும். பூஜை பாத்திரங்கள் காட்டன் துணி வைத்து விளக்குகளை சுத்தம் செய்து பிறகு சிறிது நேரம் வீட்டு நிழலில் ஆற வைத்து விடுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: வீடு துடைக்க புத்தம் புது ஐடியா

இந்த முறையில் சுத்தம் செய்தால் பூஜை பாத்திரங்களை வாரம் வாரம் சுத்தம் செய்ய வேண்டாம். மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தாலே போதும் பாத்திரங்கள் பளிச்சென்று மின்னும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம் நல்ல பலனை தரும்.

- Advertisement -