நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற, தோஷங்கள் நீங்கி தடைகள் அனைத்தும் தகர்ந்து செல்ல பிரதோஷ தினங்களில் தொடர்ச்சியாக இதை செய்யுங்கள்.

Sivan Temple
- Advertisement -

நமது பிற எல்லா தோஷங்களையும் நீக்கும் ஒரு சிறந்த தினம் பிரதோஷம். சிவபெருமானின் பிரதான வாகனமும், சீடருமான நந்தி தேவருக்கும் அவரது தலைவனான சிவபெருமானுக்கும் செய்யப்படும் வழிபாடு தான் பிரதோஷ தினத்தின் சிறப்பு என்பது சைவ சமய தாத்பரியம் ஆகும். ஆன்மீக ரீதியாக பல சிறப்புகள் கொண்ட பிரதோஷ நாளில், தொடர்ச்சியாக எத்தனை பிரதோஷ தினங்களில் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை குறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

தொடர்ச்சியாக 3 பிரதோஷங்களுக்கு சிவன் கோயிலுக்கு சென்று நந்தி மற்றும் சிவபெருமானுக்கு நடத்தப்படுகின்ற அபிஷேகத்தை தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களை நேரில் தரிசித்ததற் கிணையான புண்ணிய பலன் கிடைக்கும்.

- Advertisement -

தொடர்ந்து 5 பிரதோஷங்களுக்கு சிவன் கோயிலுக்கு சென்று சோமசூக்த பிரதட்சணம் செய்து, சிவபெருமான் மற்றும் நந்தி தேவருக்குரிய அபிஷேகத்தை கண்டு வழிபட்டு வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நோய்கள் தீரும். தீவிரமான நோய்களின் கடுமை தன்மை குறையும்.

தொடர்ந்து 7 பிரதோஷங்களுக்கு சிவன் கோயிலுக்கு சென்று பிரதட்சணம் வந்து அம்பாள் மற்றும் சிவ பெருமானுக்கு மாலை சாற்றி, வழிபட்டு வந்தால் திருமணத்தடை உள்ளவர்களுக்கு சீக்கிரத்தில் மனதிற்கினிய வரன் அமைந்து நல்ல முறையில் திருமணம் நடைபெறும்.

- Advertisement -

தொடர்ந்து 11 பிரதோஷங்களுக்கு சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமான், நந்தி தேவர் அபிஷேகத்தை கண்டு வழிபட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கின்ற சோம்பல், மந்தத்தன்மை நீங்கி உற்சாகமும், சுறுசுறுப்பும் ஏற்படும். உடல் மற்றும் மனம் வலுப்பெறும்.

நீண்ட நாட்களாக தாங்கள் நினைத்தது எதுவும் நடக்காமல் வருத்தப்படுபவர்கள் தொடர்ந்து 13 பிரதோஷ்ங்களுக்கு சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் பலிதமாகும்.

- Advertisement -

பலவகையான பரிகாரங்களை செய்தும், பல கோயில்களுக்கு சென்று பூஜைகள் செய்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் ஏங்கும் தம்பதிகள் தொடர்ந்து 21 பிரதோஷ தினங்களுக்கு சிவன் கோயிலுக்கு சென்று நந்திதேவர், சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற ஏதேனும் ஒரு அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

ஒரு சிலருக்கு தங்கள் வாழ்நாளில் தங்கள் சக்திக்கு ஏற்ப ஒரு கோயிலை கட்டி, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நிறைவேறாமல் போகலாம். கோயில் கட்ட முடியவில்லையே என மனம் வருந்துபவர்கள் தொடர்ந்து 33 பிரதோஷங்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானையும், அம்பாளையும், நந்தி தேவரையும் மற்றும் இதர தெய்வங்களையும் தரிசிப்பதால் அந்த சிவபெருமான் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த பலன் கிடைக்கும்.

ஒரு நபர் தனது வாழ்நாளில் தொடர்ந்து 77 பிரதேஷங்களுக்கு சென்று சிவபெருமானை தரிசிப்பதால் அவருக்கு ருத்ர யாகம் செய்த புண்ணிய பலன் கிட்டும்.

108 பிரதேசங்களுக்கு தொடர்ந்து சென்று வழிபடும் பக்தருக்கு தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு செய்யப்படும் தேவேந்திர பூஜை செய்ததற்குரிய பலன் கிடைக்கும்.

தொடர்ந்து 121 பிரதோஷங்களுக்கு சிவன் கோயிலுக்கு சென்று சிவபார்வதியை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி எனும் பாரம் நீங்கி, முக்தி பேறு கிடைக்கும்.

தொடர்ந்து 1008 பிரதோஷங்களுக்கு சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யும் நபருக்கு உலகையே ஆளக்கூடிய சக்தியை தருகின்ற அஸ்வமேத யாகம் செய்த புண்ணிய பலன் கிடைக்கும் என சைவ சித்தாந்த நூல்கள் கூறுகின்றன.

- Advertisement -