உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் குக்கர் பராமரிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்! இது தெரிந்தால் இனி குக்கரை இப்படி செய்ய மாட்டீர்கள்.

pressure-cooker
- Advertisement -

நம்முடைய அவசர சமையலுக்கு இப்பொழுது பெருமளவு உதவி புரிவது இந்த குக்கர் தான். குக்கர் இல்லை என்றால் சமையல் செய்வது என்பதே பல இளம் வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு மிகுந்த சிரமம் ஆகிவிடும். மடமடவென சமையலை முடிக்க உதவும் இந்த குக்கரின் மூலம் எந்த அளவிற்கு உபயோகம் உள்ளதோ! அதே அளவிற்கு ஆபத்தும் நிறைந்துள்ளது. குக்கர் வெடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் சற்று ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிகம் தான். எரிபொருளை சிக்கனப்படுத்தி நம்முடைய வேலைகளையும், உழைப்பையும் மிச்சப்படுத்தி கொடுக்கும் இந்த குக்கரின் பராமரிப்பில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

presure-cooker-lid

தினமும் ஒவ்வொரு முறையும் குக்கரை பயன்படுத்திய பிறகும் கட்டாயம் குக்கரின் மூடியை நன்கு சுத்தம் செய்து வைக்க வேண்டும். குக்கரில் இருக்கும் கேஸ்கட்டை பலரும் கலட்டி சுத்தம் செய்வது கிடையாது. உணவின் துகள்கள் கட்டாயம் கேஸ்கட்டுக்குள் படிந்து சரியாக கழுவாமல் போவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உண்டு. எனவே கேஸ்கட்டை சுத்தம் செய்து பிரீசரில் வைத்து விடவும். அப்போது தான் நீண்ட நாள் உழைக்கும்.

- Advertisement -

மூடியை கழுவும் பொழுது விசில் வரும் ஓட்டையில் தண்ணீரை நன்கு ஊற்ற வேண்டும். தண்ணீர் சரளமாக வர வேண்டும். அப்படி அல்லாமல் தண்ணீர் வருவதில் இடையூறுகள் ஏற்பட்டால் உணவின் துகள்கள் அதில் அடைத்து கொண்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். குக்கரின் விசிலையும் தனித்தனியாக கழட்டும் படி தான் கொடுத்து இருப்பார்கள். எனவே விசிலை தனித்தனியாக கழட்டி ஒரு முறை சோப்பு போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

cooker-stain

குக்கரில் சமைக்கும் உணவானது மேலே பொங்கி வராமல் இருக்க குழம்பு வகைகளில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சமைத்து பார்க்கலாம். சமைக்கும் பொழுது நீங்கள் ஊற்றும் தண்ணீரானது குக்கருக்கு முக்கால் பாகம் வரை தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் தண்ணீர் வைத்து சமைக்கக் கூடாது. சமைக்கும் தண்ணீரின் அளவை கட்டாயம் இப்படி சரிபார்ப்பது நல்லது. எல்லாம் தயார் செய்து விட்டு குக்கரை உடனே மூடி வைத்து விடக் கூடாது. குழம்பு அல்லது ஏதாவது அதில் இருக்கும் பொருட்கள் நன்கு கொதித்த பின் தான் மூடியை மூட வேண்டும். பொருட்கள் சூடாவதற்குள் மூடியை மூடி வைக்காதீர்கள்.

- Advertisement -

அதே போல் தான் குக்கரின் மூடியை மூடி வைத்த பின் அதிலிருந்து காற்று வருகிறதா? என்பதை பரிசோதிக்க வேண்டும். காற்று வந்த பின்னர் தான் விசிலை மாட்ட வேண்டும். குக்கரை அடுப்பில் வைக்கும் போதே விசிலை மாட்டி வைப்பது தவறான செயலாகும். காற்று வருவதற்கு முன்னரே விசிலை மாட்டி விட்டால் அதில் உணவுத் துகள்கள் மாட்டிக் கொண்டால் பிரஷர் வெளியில் வராமல் தடைபடும் ஆபத்து உண்டு.

pressure-cooker

குக்கரில் பிரஷர் முழுவதுமாக தானாக வெளியேறும் வரை நிதானம் காப்பது நல்லது. அவசரத்திற்காக குக்கரின் விசிலை பாதியாக மேலே எடுத்து விடுவது ஆபத்தை ஏற்படுத்தும். இதன் உள்ளே இருக்கும் குழம்பானது கொதி நிலையிலேயே இருப்பதால் வெடிக்கும் அபாயம் உண்டு. நீங்கள் அவசரமாக விசிலை திறக்க நினைத்தால் கொஞ்சம் தண்ணீரை மேலே தெளித்து அதன் பின் விசிலை எடுத்து விடவும். இதனால் ஆவியானது சற்றே அடங்கிவிடும். குக்கர் வெடிக்காமல், பாதுகாப்பாகவும் இருக்கும். நம் தேவைக்கு பயன்படுத்தும் பொருட்கள், நமக்கு ஆபத்தையும் உண்டாக்கி விடும் என்பதை எப்பொழுதும் நம் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

- Advertisement -