இனி மணிக்கணக்கா கிச்சனிலேயே நிக்காம சட்டுன்னு வேலையை முடிச்சிட்டு, உங்க பொன்னான நேரத்தை மிச்சப்படுத்த அருமையான ஐடியா.

kitchen lady
- Advertisement -

பெண்களை பொருத்த வரையில் பாதி நேரம் சமையலறையிலேயே தங்கள் நேரத்தை செலவழித்து விடுகிறார்கள். இதனால் தங்களுக்கு பிடித்த காரியத்தில் கூட நேரத்தை செலவழிக்க முடியாமல் போகிறது. இந்த வீட்டு வேலை சமையல் வேலைகளில் சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து கொண்டால் அவர்கள் வேலைகள் விரைவாக முடித்துக் கொண்டே நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். அப்படி நேரத்தை மிச்சப்படுத்தக்கூடிய சில குறிப்புகளை இந்த வீட்டு குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.

சாதம் வடிக்கும் போது சில நேரங்களில் சாதத்தில் தண்ணீர் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படி இருந்தால் சாப்பிடும் போது சாதம் அவ்வளவு ருசியாக இருக்காது. இதற்கு வடித்த சாதத்தை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பிறகு அதன் மேல் இரண்டு துண்டு பிரட்டை வைத்து மூடி விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால் சாதத்தில் இருக்கும் ஈரம் அனைத்தும் பிரட் உரிஞ்சி விடும். சாதமும் நல்ல உதிரி உதிரியாக இருக்கும்.

- Advertisement -

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது முதலில் பாத்திரத்தில் மாவை சேர்ப்பதற்கு பதிலாக பாத்திரத்தை சுற்றி எண்ணெய் தேய்த்து விடுங்கள். அதன் பிறகு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றிய பிறகு உங்களுக்கு தேவையான அளவு மாவை போட்டு பிசைந்து கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது பாத்திரத்தில் கொஞ்சம் கூட மாவு ஒட்டவே ஒட்டாது. இதனால் பாத்திரம் தேய்க்கும் போது சிரமம் இல்லாமல் தேய்த்து விடலாம்.

இட்லி ஊற்றுவதற்கு முன்பாக மாவில் கொஞ்சமாக நல்லெண்ணெய் சேர்த்து கலந்து ஐந்து நிமிடம் வைத்து விடுங்கள். அதன் பிறகு இட்லி ஊற்றினால் இட்லி நல்ல பஞ்சு போல சாப்டாக இருக்கும் சீக்கிரத்தில் புளிக்காது. குழம்பு வைக்கும் போது நாம் தேங்காயை முதலிலேயே அரைத்து ஊற்றி விடாமல் கடைசியாக இருக்கும் போது ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விட்டால் குழம்பின் ருசி பிரமாதமாக இருக்கும். தேங்காயின் சத்தும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

இதைப் போல் சப்பாத்தி நீண்ட நேரம் சாப்டாகவும், சூடாகவும் இருக்க ஹாட் பாக்ஸில் சப்பாத்தியை வைப்பதற்கு முன்பாக ஒரு சின்ன ஸ்டாண்டை உள்ளே வைத்து விடுங்கள். (தண்ணீர் பானை வைக்க பயன்படுத்தும் ஸ்டாண்ட்) அதற்கு மேல் மெல்லிய காட்டன் துணியை வைத்துப் பிறகு சப்பாத்தியை வைத்து துணி வைத்து மூடி விடுங்கள். அதன் பிறகு ஹாட் பாக்சை போட்டு மூடினால் காலையில் சுட்ட சப்பாத்தி இரவு வரையில் அப்படியே சூடாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

வீட்டில் பெருங்காயம் தீர்ந்த பிறகு அந்த டப்பாவை தூக்கி போடாமல் பெருங்காய வாடை வராமல் சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் கோதுமை மாவை நிரப்பி வைத்து விட்டால் சப்பாத்தி திரட்டும் போது நாம் கோதுமை மாவை சேர்த்து தான் திரட்டுவோம். அதற்கு தனியாக ஒரு கிண்ணத்தில் மாவை கொட்டி திரட்டிய பிறகு மீதமானால் பயன்படாமல் வீணாகி விடும். இது போல டப்பாவில் சேர்த்துக் கொண்டு திரட்டும் போது லேசாக தூவிக் கொண்டால் மாவும் அதிகம் வீணாகாது வேலையும் மிச்சமாகும்.

- Advertisement -

பீட்ரூட், கேரட் போன்ற காய்கள் எல்லாம் பிரிட்ஜிலே வைத்தால் கூட இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் வதங்கி விடும். இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் முன் மேல்புறம் அடிபுறம் என இரண்டு பக்கமும் நறுக்கி விட்டு இதை ஒரு காற்று போகாத பாக்ஸில் போட்டு வைத்து விடுங்கள். பத்து நாள் ஆனாலும் இந்த காய்கறிகள் புதிதாக வாங்கியது போலவே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க நாம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் இந்த பொருட்கள் இருந்தாலே போதும். இந்தப் பொருள்களில் இவ்வளவு பயன்கள் இருக்கா இதுவரைக்கும் தெரியம்மா போச்சே!

இந்த சின்ன சின்ன குறிப்புகள் உங்கள் வேலைகளில் பெரிது உதவியாக இருக்கும் என நினைத்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -