விதவிதமா குக்கர் வாங்கி சமைக்கிறது பெரிய விஷயம் இல்ல, ஒரு முறை வாங்குன குக்கரை பல வருஷத்துக்கு எப்படி பத்திரமா பாத்துக்குறோம் என்பது தான் முக்கியம். குக்கருக்கு அடிக்கடி செலவு பண்றது குறைக்கணும்னா இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் குக்கர் இல்லாத வீடு என்று எதுவுமே கிடையாது. அதை விட குக்கர் இல்லாமல் சமைக்கவே முடியாது எனும் அளவிற்கு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக குக்கர் வந்து விட்டது. சாதம் வடிக்க, காய்கறிக்கு, பருப்பு வேக வைக்க எப்படி என ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு, மூன்று குக்கர் வைத்திருக்கிறார்கள். இப்படி நம் தேவைகளை பூர்த்தி செய்யும், நேரத்தையும் மிச்சம் படுத்தும் இந்த குக்கரை பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை, ஆனால் அதை பயன்படுத்தும் முறையில் தான் நாம் நிறைய தவறுகள் செய்கிறோம் அந்த தவறுகளை எப்படி சரி செய்து கொள்வது குக்கரை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது போன்ற பயனுள்ள சில குறிப்புகளை இந்த பதிவில் இடம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் குக்கரை அடுப்பில் வைத்த உடன் வெயிட் போடக் கூடாது இது முதலில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். குக்கரின் வெண்டிலேட்டர் (குக்கர் விசில் வரும் வழி) வழியாக காற்று கொஞ்சம் வெளியேறியவுடன் தான் வெயிட் போட வேண்டும். அப்போது தான் அதில் ஏதேனும் அடைப்பு இருந்தால் முதலில் வரும் ஆவியில் அந்த அடைப்பு நீங்கி விடும் குக்கர் வெடிக்கும் அபாயத்தை தடுத்து விடலாம். குக்கரும் அதிக நாள் உழைக்கும்.

- Advertisement -

அடுத்தது கேஸ் கட் இதை பயன்படுத்தும் போது சமையல் வேலை முடிந்தவுடன் சிலர் அந்த கேஸ் கட்டை குக்கரில் அப்படியே வைத்து விடுவார்கள் அப்படி வைக்கவே கூடாது. குக்கர் சமைக்கும் போது அது கொதி நிலையில் இருக்கும் போது லேசாக அதன் சுற்றி ஈரம் இருக்கும் அதனால் கேஸ்கட் ஏதும் ஆகாது. ஆனால் சமைத்து முடித்த பிறகு மூடியை திறந்த பிறகு மூடியிலே கேஸ்கட் இருந்தால் மூடியில் உள்ள அனலில் கேஸ்கட் இளகி விடும். அதன் பிறகு கேஸ் தண்ணீர் வெளியில் வரும் சமைக்க முடியாது. இதை தவிர்க்க குக்கர் சமைத்து முடித்ததும் மூடியில் இருந்து ஸாசேசுட் வெளியே எடுத்து வைத்து விட வேண்டும். இதனால் கேஸ் கட்டை அடிக்கடி மற்ற வேண்டிய அவசியம் இல்லை.

அதே போல் குக்கரின் மேல் மூடியில் கேஸ் ரிலீஸ் பாயிண்ட் இருக்கும் அதாவது (over pressure plug ) அதில் சின்ன ஒரு மெல்லிய தகடு போல் அடைத்து இருக்கும். பிரஷர் குக்கரில் மேலே பிரஷர் வராமல் உள்ளே அதிக அழுத்தம் ஆகும் போது அந்த இடம் தானாகவே விலகி கேஸ் வெளியேறி குக்கர் வெடிக்கும் அபாயத்தை தடுத்து விடும். இந்த இடத்தில் ஓட்டை விழுந்தாலும் மறுபடியும் அதை பயன்படுத்தக் கூடாது உடனே இதை மட்டும் மாற்றினால் போதும்.

- Advertisement -

குக்கரில் எந்த அளவு சமைக்க வேண்டும் என்று தெரிந்து அந்த அளவிற்கு மட்டும் தான் சமைக்க வேண்டும் ஒரு கிலோ சாதம் சமைக்கும் குக்கரில் 2 கிலோ என்றோ இல்லை ஒரு கை அரிசி தானே கூட போடுகிறோம் என்று நினைத்த போடக் கூடாது. குக்கரின் கொள்ளளவுக்கு குறைவாக போடலாமே என்று அதிகமாக கண்டிப்பாக சமைக்கவே கூடாது. அப்படி சமைக்கும் போது அதிக அழுத்தம் ஏற்பட்டு குக்கர் வெடிக்கும்.

அதே போல் இப்பொழுதெல்லாம் இன்டக்ஷன் ஸ்டவ்வில் சமைப்பதற்கு கேஸ் ஸ்டவில் சமைப்பதற்கு என தனித்தனியாக குக்கர் விற்பனையில் உள்ளது. ஆனால் இன்டக்ஷன் அடுப்பில் வைக்கும் போது அதன் வெப்ப நிலை வேறு, கேஸ் அடுப்பில் வைக்கும் போது அதனுடைய வெப்ப நிலை வேறு இரண்டிற்கும் இதை சரியாக தெரியமால் பயன்படுத்தும் போது அடியில் இருக்கும் பிளேட் ஆகி குக்கர் சீக்கிரம் பழுதாக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

குக்கரின் மேல் வென் டியூப்  பகுதியில் சமைக்கும் முன் அதில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்று கட்டாயமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அடைப்பு இருந்தாலும் கேஸ் வெளியேறாமல் குக்கர் வெடிக்கும் அபாயம் உண்டு.

அதே போல் நீங்கள் அடுப்பில் வைத்து வெகு நேரம் ஆகியும் விசில் வரவில்லை என்றால் உடனடியாக அவசரப்பட்டு நீங்கள் மூடியை திறந்து விடவே கூடாது. அடுப்பை அணைத்துவிட்டு ஏதாவது ஒரு சின்ன கரண்டி அல்லது குச்சி கொஞ்சம் நீளமாக எடுத்துக்கொண்டு தள்ளி நின்று லேசாக வந்து குக்கர் மேல் விசிலை தூக்கி காற்று இறங்கியவுடன் மோடியை திறக்க வேண்டும் உடனடியாக திறக்கும் போது அதிக அழுத்தத்தின் காரணமாக மூடி வேகமாக திறந்து உங்கள் முகத்தில் அடித்து விடும் அல்லது உள்ளிருக்கும் பொருட்கள் சூட்டுடன் அப்படியே உங்கள் மீது தெறிக்கும் வாய்ப்பு அதிகம் இது பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி நடக்கும் விபத்து.

எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தகவல் தெரியாதவர்கள் இதை தெரிந்து கொண்டு கவனமாக சமைத்தால் நல்லது தானே.

- Advertisement -