இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா ஒரு மணி நேரம் வேகற அரிசியை கூட பத்து நிமிஷத்துல குக்கரில் அதுவும் உதிரி உதிரியா வடிச்சு சமைக்கலாம் தெரியும்மா ? இது தெரியாம இத்தனை நாள் டைம் வேஸ்ட் பண்ணிட்டோமே கண்டிப்பா பீல் பண்ணவிங்க.

cooker rice
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் எல்லா சமையலுமே குக்கரை பயன்படுத்தி தான் செய்கிறார்கள். இதற்கு காரணம் விரைவாக சமையல் முடிந்து விடும் என்பதோடு, சமையல் எரிவாயும் அதிகம் செலவாகாது. அப்படி அனைத்துமே சமைத்தால் கூட சில வீடுகளில் சாதம் மட்டும் குக்கரில் செய்து சாப்பிட மாட்டார்கள் காரணம் குக்கரில் வடிக்கும் சாதம் கஞ்சி சுற்றியது போல் இருக்கும். இன்னும் சில வீடுகளில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் குக்கரில் வடித்த சாதத்தை சாப்பிடக் கூடாது என்ற காரணமும் கூட. இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் குக்கரில் சாதத்தை நாம் சாதாரணமாக வடிக்கும் சாதத்தைப் போலவே வடித்து சமைக்கலாம்.

இந்த முறையில் சாதம் வடித்து சாப்பிடும் போது சர்க்கரை வியாதிக்காரர்கள் கூட பயமில்லாமல் இந்த சாதத்தை சாப்பிடலாம். அது மட்டும் இன்றி ஒரு சில அரிசிகள் வேக ஒரு மணி நேரம் வரை கூட ஆகும். அதுபோன்ற அரிசியை கூட பத்து நிமிடத்தில் வேக வைத்து விடலாம் என்பது கூடுதல் தகவல். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த முறையில் சாதம் வடிப்பதற்கு இரண்டு டம்ளர் அரிசியை எடுத்து சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு அரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் என்று அவசியம் கூட இல்லை. அடுத்ததாக அடுப்பில் குக்கரை வைத்து குக்கரில் முக்கால் பாகம் வரை தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தண்ணீர் கொத்தவுடன் ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து விடுங்கள். அரிசியை சேர்த்த பிறகு தண்ணீர் குக்கரின் முக்கால் பாகம் வரை தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் தண்ணீர் இருந்தால் அதை தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது குக்கரை மூடி போட்டு விசில் வைத்து விடுங்கள். குக்கர் விசில் வரும் தருவாயில் அடுப்பை அணைத்து விட்டு, அப்படியே பத்து நிமிடம் வைத்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து விசில் இறங்கியவுடன் மூடியை திறந்து ஏற்கனவே எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி ஒரு முறை கொதிக்க விடுங்கள்.

ஒரு வேளை குக்கரில் தண்ணீரின் அளவு சரியாக இருந்து நீங்கள் எடுத்து வைக்கவில்லை என்றால் தனியாக ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து இதில் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதின் மூலம் குக்கர் சாதத்தில் இருக்கும் கஞ்சி அனைத்தும் இந்த தண்ணீரில் வடிந்து விடும். அதன் பிறகு வெறும் மூடியை மட்டும் போட்டு சாதத்தை ஒரு பாத்திரத்தில் மேல் வடித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த 5 குறிப்புகளும் முழுக்க முழுக்க உங்க நன்மைக்காக மட்டும் தான். எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க. இதையும் நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.

குக்கரில் இருந்து தண்ணீர் முற்றிலுமாக வடிந்த பிறகு சாதத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த முறையில் சாதம் வடிக்கும் போது குக்கரில் வடித்து சாதம் போலவே இருக்காது. நாம் வீட்டில் சாதாரணமாக பாத்திரத்தில் வடிக்கும் சாதம் போல உதிரி உதிரியாக இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இது ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -