இந்த 5 குறிப்புகளும் முழுக்க முழுக்க உங்க நன்மைக்காக மட்டும் தான். எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க. இதையும் நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.

tava
- Advertisement -

நம்முடைய வீட்டிற்கு அடிக்கடி தேவைப்படும் படியான நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரும் படியான ஒரு சில பயனுள்ள வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இது சிறு தவறு என்று நினைத்து விட்டு விட்டால் கூட, அது நமக்கு எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். அப்படிப்பட்ட தவறுகளை சரி செய்ய இந்த குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். ஐந்து நிமிடத்தை ஒதுக்கி இந்த ஐந்து குறிப்புகளையும் படித்து தான் பாருங்களேன். இல்லத்தரசிகள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய 5 வீட்டு குறிப்பு இதோ.

குறிப்பு 1:
வீட்டில் இருக்கும் முக்கால்வாசி பெண்களுக்கு குதிக்கால் வெடிப்பு இருக்கும். ஆனால் அதை அவர்கள் அலட்சியமாக நினைப்பார்கள். குதிகால் வெடிப்பு தானே என்று விட்டுவிடுவார்கள். நாளடைவில் நமக்கு எதிர்காலத்தில் குதிகால் வெடிப்பின் மூலம் தாங்க முடியாத கால் வலி ஏற்படும். நின்று சமைக்க முடியாது.

- Advertisement -

நடந்து வேலை பார்க்க முடியாத அளவிற்கு கூட கால் வலி வருவதற்கு குதிகால் வெடிப்பும் ஒரு காரணம். ஆகவே குதிகால் வெடிப்பை அலட்சியமாக நினைக்காதீங்க. குதிகால் வெடிப்பு நீங்க எத்தனையோ கை வைத்தியம் உள்ளது. அதோடு சேர்த்து இதையும் முயற்சி செய்து பாருங்கள்.

வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் வாழைப்பழ தோலை குப்பையில் போடுவீர்கள் அல்லவா வாழைப்பழ தோலின் உள்பக்கத்தை உங்களுடைய குதிகால் வெடிப்பில் வைத்து நன்றாக தொடர்ந்து மசாஜ் செய்துவிட குதிகால் வெடிப்பு படிப்படியாக குறையும். பிறகு அந்த வாழைபழ தோலில் எசென்ஸ் உங்கள் காலிலேயே சிறிது நேரம் அப்படியே ஒட்டி இருக்க வேண்டும். அதற்காக காலில் சாக்ஸ் போட்டுக்கோங்க.

- Advertisement -

குறிப்பு 2:
இப்போது நிறைய பேர் வீட்டில் குக்கரில் தான் சாதம் வைக்கிறார்கள். அதாவது கஞ்சியை வடிக்காமல் அப்படியே சாப்பிடும் சாதம் எந்த அளவுக்கு உடம்புக்கு நல்லது கெட்டது என்ற ஆராய்ச்சிக்கு உள்ளே நாம் போக வேண்டாம். ஆனால் வயதானவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இப்படி குக்கரில் சாதம் வைத்து தினமும் கொடுக்கக் கூடாது. வடித்த சாதத்தை அவர்களுக்கு கொடுப்பதுதான் நல்லது.

ஒருவேளை உங்களுக்கு காலை நேரமில்லை, குக்கரில் தான் சாதம் வைக்கிறீர்கள் என்றால் வழக்கமாக நீங்கள் அரிசியை மூன்று முறை கழுவுவீர்கள் என்றால், குக்கரில் சாதம் வைக்க ஐந்து முறை அரிசியை கழுவ வேண்டும். கழுவிய அரிசியில் நல்ல தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற வைத்து மீண்டும், அந்த அரிசியை கழுவி ஊறவைத்த தண்ணீரை கீழே கொட்டி விட்டு, மீண்டும் நல்ல தண்ணீரை ஊற்றி குக்கரில் சாதம் வைத்து சாப்பிடுங்கள். இதுவும் நல்லது என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் அவசரத்துக்கு இந்த குறிப்பு பயன்படும்.

- Advertisement -

குறிப்பு 3:
நாம் பாத்திரத்தை பயன்படுத்தும் ஸ்டீல் நார் சில சமயங்களில் ரொம்பவும் அசுத்தமாகிவிடும். பாத்திரம் தேய்க்கும் போது அதில் இருக்கும் சமையல் பொருட்கள் எல்லாம் இந்த ஸ்டீல் நாரில் ஒட்டி இருக்கும். எவ்வளவுதான் கழுவினாலும் போகாது. இப்படி ஸ்டீல்னார் அசுத்தமாக இருந்தால் இதில் இருக்கும் கிருமி, மற்ற பாத்திரத்தை தேய்க்கும் போது அதிலும் ஒட்டி, இதன் மூலம் உடம்புக்கு கெடுதி தான் ஏற்படும். ஆகவே இப்படி அசுத்தம் அடைந்த ஸ்டீல் நாரை 10 செகண்ட் நெருப்பில் காட்டுங்கள். அதில் இருக்கும் உணவு பண்டங்கள் எல்லாம் எரிந்து பொசுங்கிவிடும். அதன் பின்பு சுடுதண்ணீரில் போட்டு கழுவி மீண்டும் பாத்திரம் தேய்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு 4:
நாம் பயன்படுத்தும் அலுமினிய பாத்திரம் சில நாட்களில் உப்பு படிந்து பார்ப்பதற்கு மங்கி போய் இருக்கும். ஸ்டீல் நாரில் தேய்த்தால் அதிலிருந்து கருப்பு கருப்பாக அழுக்கு வெளி வருவதை பார்ப்போம். இந்த பாத்திரத்தை மாதம் ஒருமுறை இப்படி சுத்தம் செய்து பாருங்கள். குளிக்கிற சோப்பை துருவி எடுத்துக்கோங்க. அதோடு கோதுமை மாவு கலந்து அலுமினிய பாத்திரங்களை தேய்த்தால், அந்த பாத்திரத்தில் ஒட்டி இருக்கும் அழுக்கு சுத்தமாக நீங்கி புதுசு போல பளபளக்கும். ஆனால் அதில் குளிக்கிற சோப்பின் வாடை வீசும். ஆகவே மீண்டும் ஒருமுறை விம் லிக்விடை ஊற்றி நன்றாக தேய்த்து கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: குடை மிளகாயை வச்சு இப்படி ஒரு சுவையான கிரேவி செஞ்சு பாருங்க. பத்து சப்பாத்தியை கூட சலிக்காமல் சாப்பிடுவாங்க. சூப்பரான இந்த கிரேவியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

குறிப்பு 5:
மண்ணால் செய்த தோசை கல் என்று நம்பி தானே இந்த தோசை கல்லை வாங்கினோம். ஆனால் இதிலும் கலப்படம். எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். மண் தோசை கல் நடுவில் சிமென்ட் லேயர் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த தோசை கல் உங்கள் வீட்டில் இருந்தால் ஒருமுறை செக் பண்ணி பாருங்க. ஆனால் தோசை கல்லை உடைத்தால்தான் உள்ளே இருப்பது மண்னா அல்லது சிமெண்ட்டா என்பதை கண்டுபிடிக்க முடியும். ஒரு வேளை நடுவில் சிமென்ட் லேயர் பூசிய மண் தோசை கல்லாக இருந்தால், அதில் தொடர்ந்து தோசை வாத்து சாப்பிடக்கூடாது. அது உடலுக்கு ஆரோக்கியமும் அல்ல.

- Advertisement -