செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்படி?

eno copper
- Advertisement -

எல்லோர் வீட்டிலும் நிச்சயமாக ஒரு செம்பு பாத்திரமாவது இருக்கும். ஆனால் அது இருக்கும் இடம் தான் முக்கியம். நிச்சயமாக இந்த செம்பு பாத்திரங்களை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்திருப்பார்கள் அல்லது பரண்மேல் தூக்கி வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் செம்பு பாத்திரங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் இல்லையெனில் அது நிறம் மங்கி அழுக்காக மாறி அசிங்கமாகி விடும்.

இதனாலேயே பலரும் செம்புப் பாத்திரங்களை பயன்படுத்த தயங்குவார்கள். ஆனால் செம்பு பாத்திரங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்று தெரிந்தால் பெரும்பாலும் அதன் பயன்பாட்டை தவிர்க்க மாட்டார்கள். எதுவாக இருப்பினும் இன்றைய அவசரகால சூழ்நிலையிலும் அனைவரும் பணிக்கு செல்வதால் அதை அடிக்கடி சுத்தப்படுத்தி பயன்படுத்துவதும் கொஞ்சம் சிரமம் தான்.

- Advertisement -

இந்தப் பிரச்சினையை எளிதில் சரி செய்யும் விதத்தை வீட்டுக் குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். செம்பு பாத்திரங்களை மிகவும் சுலபமாக அதுவும் சீக்கிரத்தில் சுத்தம் செய்யக் கூடிய எளிமையான வழிமுறை இதோ உங்களுக்காக.

செம்புப் பாத்திரங்களை சுலபமாக சுத்தம்

செம்பு பாத்திரங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தும் பொருள் தான் மிகவும் முக்கியமானது. முன்பெல்லாம் நம் வீட்டு பெரியோர்கள் பாத்திரங்களை சுத்தப்படுத்த வீட்டின் அருகில் இருக்கும் மண்ணையே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அது போன்தொரு முறையை தான் இப்போது நாம் பயன்படுத்த போகிறோம்.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் களிம்பு மண்ணாக எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக குழைத்த பிறகு அதை செம்புப் பாத்திரங்கள் மீது தேய்த்து விடுங்கள். இப்போது லேசாக கை வைத்து தேய்த்தாலே போதும் பாத்திரங்கள் மீது இருக்கும் கறைகள் நீங்கி பளிச்சென்று மாறி விடும்.

அதே போல் ஒரு புது அகல் எடுத்துக் கொள்ளுங்கள். இதை நாம் காய் சீவும் சீவலில் வைத்து லேசாக தேய்த்தாலே அதிலிருந்து செம்மண் உதிரும் இந்த மண்ணை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு செம்மண் தனியாக கிடைக்கும் என்றால் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் செம்மண்ணிற்கு ஒரு ஸ்பூன் சால்ட் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் அரை எலுமிச்சை பழ சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை செம்புப் பாத்திரங்கள் மீது தேய்த்து பிழிந்த எலுமிச்சை தோலை வைத்து தேய்த்து விடுங்கள். பாத்திரங்கள் புதிதாக வாங்கியது போல் அவ்வளவு பளபளப்பாக மின்னும். இதுவும் மிகவும் எளிமையானதொரு முறை தான்.

இவை அனைத்திலும் விட இன்னும் வித்தியாசம் உணவு முறை ஒன்றுள்ளது. இதற்கு ஒரு ஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் துணி துவைக்க பயன்படுத்தும் எந்த விதமான பவுடரையும் பயன்படுத்தலாம். இத்துடன் ஒரு ஸ்பூன் ஈனோ சேர்த்துக் கொள்ளுங்கள். இதை கலக்க கொஞ்சமாக வினிகர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது இதை ஒரு பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வந்து விடுங்கள். இந்த கலவையை செம்புப் பாத்திரங்கள் மீது தேய்த்து பாருங்கள். இப்படி கூட பாத்திரங்களை சுத்தம் செய்யலாமா என்று நீங்கள் அசந்து போவீர்கள் அந்த அளவிற்கு அத்தனை சுலபமான முறையில் சீக்கிரத்தில் பாத்திரங்கள் பளிச்சென்று மாறி விடும்.

இந்த மூன்று வழிமுறைகளில் உங்களுக்கு மிக எளிதாக எதைச் செய்ய முடியுமோ அந்த வழிகளில் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். செம்புப் பாத்திரங்கள் பயன்பாட்டை அதிக அளவு நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கொண்டு வருவது நம்முடைய உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: கட்டிப் பெருங்காயத்தை தூள் செய்ய சூப்பரான ஐடியா

ஆகையால் இனியும் வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் செம்புப் பாத்திரங்களை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழும் வழியை தேடி கொள்வோம். இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நம்முடைய வருங்கால சந்ததியினருக்கும் நல்லது.

- Advertisement -