இந்த மூன்று பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். செம்பு பாத்திரங்களை கண்ணாடி போல் பளபளவென்று ஜொலிக்க வைக்கலாம்

copper2
- Advertisement -

அனைவரது வீட்டிலும் பூஜை பொருட்களை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவ்வாறு பூஜை சாமான்களை சுத்தம் செய்வது மிகவும் எளிமையான விஷயம் கிடையாது. அதில் எண்ணெய் பிசுக்குகளும், விடாப்பிடியான கரைகளும் அதிகமாக இருக்கும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரங்களை தினமும் உபயோகப்படுத்தி சுத்தம் செய்யும் பொழுது சற்று சுலபமாக இருக்கும். ஆனால் பயன்படுத்தாமல் இருந்து வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யும்போது அதில் அதிகமாக கறுப்பு படிந்து இருக்கும். இவற்றை சுத்தம் செய்வதற்கு அதிக அளவு அழுத்தமாகத் தேய்க்க வேண்டும். பலமுறை தேய்த்தாலும் இவற்றில் இருக்கும் கறைகளை முழுவதுமாக சுத்தம் செய்ய முடிவதில்லை. ஆனால் வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்களை பயன்படுத்த ஒரு லிக்விட் செய்து வைத்துக்கொண்டால் செம்புப் பாத்திரங்களை துலக்குவது மிகவும் ஈஸியான வேலையாக மாறிவிடும். வாருங்கள் இதனை எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

poojai

லிக்விட் தயார் செய்யும் முறை:
முதலில் ஒரு உருண்டை புளியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த புளியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு புளியைக் கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த புளித்தண்ணீரை சற்று கெட்டியான பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் நான்கு ஸ்பூன் கல் உப்பு சேர்க்க வேண்டும்.

- Advertisement -

புளி கரைசலுடன் கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்ட பின்னர் நுரைப்பதற்காக வீட்டில் பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் ஏதாவது ஒரு லிக்விடை அரை ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு, இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவை மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவை எத்தனை மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

puli

உபயோகப்படுத்தும் முறை:
முதலில் செம்புப் பாத்திரங்களை லேசாக தண்ணீரில் கழுவி விட்டு, பின்னர் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து கொண்டு, பாதி எலுமிச்சை பழத்தை வைத்து முதலில் செம்பு பாத்திரங்களை லேசாக தேய்த்து கொடுக்க வேண்டும். எலுமிச்சை பழம் தேய்த்து பின்னர் 5 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு ஸ்க்ரப்பரல பயன்படுத்தி செய்து வைத்துள்ள லிக்விடிலிருந்து லேசாகத் தொட்டுக் கொண்டு, செம்பு பாத்திரங்களை தேய்த்து கொடுக்க வேண்டும். அதிக அளவு அழுத்தம் கொடுக்காமல் லேசாக தேய்த்தாலே போதும். அதில் இருக்கும் கருப்பு கதைகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் முழுவதுமாக அகன்றுவிடும். இவ்வாறு ஒரு இரண்டு நிமிடம் தேய்த்த பின்னர் தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும்.

sembu-sombu

இவ்வாறு நீங்களும் உங்க வீட்டில் இந்த கணக்கிலே தயார் செய்து பயன்படுத்தி பாருங்கள். இந்த லிக்விட் வைத்து செம்புப் பாத்திரங்களை துலக்கிய பின்னர் உங்கள் பாத்திரங்கள் எந்த அளவிற்கு பளபளவென்று மாறி இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.இந்த மூன்று பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். செம்பு பாத்திரங்களை கண்ணாடி போல் பளபளவென்று ஜொலிக்க வைக்கலாம்

- Advertisement -