உங்க வீட்ல இருக்க செம்பு பாத்திரம் எதுவாக இருந்தாலும் 1 நிமிஷத்தில் சுத்தம் செய்துவிடலாம். செம்பு வாட்டர் கேன் உள்ளேயும் கூட பளபளப்பாக மாறும்.

copper2
- Advertisement -

நாகரீக காலத்திற்கு நாம் மாறிக்கொண்டே வந்தாலும், இப்போதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக பழமையையும் நாம் விரும்ப ஆரம்பித்து விட்டோம். செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து குடித்தால், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை உணர்ந்து, வீட்டில் பரனை மேல் தூக்கிப் போட்டு வைத்திருந்த செம்பு பாத்திரத்தை, செம்பு அண்டாக்களை எடுத்து பயன்படுத்த ஆரம்பித்து இருக்கின்றோம். நல்ல விஷயம் தான். இருப்பினும் பழைய செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில், பயன்படுத்திக் கொண்டு இருந்தாலும், அதன் நிறம் மாறும். அது இயற்கை தான். கருப்பான செம்பு பாத்திரங்களை, எப்படி பளிச்சென்று மாற்றுவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sembu-sombu

இதற்கு தேவையான பொருட்கள். ஒரு எலுமிச்சை பழம், தூள் உப்பு இந்த இரண்டு பொருட்கள் தான். முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு உப்பை போட்டுக்கொள்ளுங்கள். அதாவது பெரிய அண்டாவாக இருந்தால், உப்பு 2 ஸ்பூன் தேவைப்படும். சிறிய வாட்டர் பாட்டிலேக்கு ஒரு ஸ்பூன் போதும் அல்லவா? உப்பை தேவையான அளவு எடுத்துக் கொண்டு, எலுமிச்சை பழத்தை நேரடியாக உப்பிலேயே பிழிய வேண்டும்.

- Advertisement -

எலுமிச்சை பழச் சாறும், உப்பும் சேர்ந்து ஒரு பேஸ்ட் உங்களுக்கு கிடைத்திருக்கும். இப்போது உங்கள் கையில் இருக்கும் பிழிந்த எலுமிச்சம் பழத்தோலிலேயே, அந்த பேஸ்ட்டை தொட்டு உங்கள் வீட்டில் இருக்கும் செப்புப் பாத்திரத்தை தேத்து பாருங்கள். அழுத்தம் கூட கொடுக்க வேண்டாம். லேசாகத் தேய்த்தால், அதில் இருக்கும் பழுப்பு நிறம், கருப்பு அனைத்தும் நீங்கி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

copper

குறிப்பாக செம்பு பாத்திரத்தின் உள் பக்கம் இருக்கும் கருப்பை நீக்குவது கஷ்டம். அதாவது தண்ணீர் ஊற்றி ஊற்றி, அந்தப் பாத்திரம் முழுமையாக கருப்பு நிறத்தில் மாறி இருக்கும். அந்த கருப்பு கூட சுலபமாக நீக்கிவிடும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இதை போல் சிலபேர் இப்போதெல்லாம் செம்பு வாட்டர் பாட்டிலை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

- Advertisement -

செம்பு பாத்திரத்தை நன்றாக கழுவவில்லை என்றால், அதில் பச்சை நிறத்தில், மஞ்சள் நிறத்தில் பாசி போல ஒரு அழுக்கு படிய ஆரம்பிக்கும். அதோடு தண்ணீரை ஊற்றி வைத்து குடித்தால், அது உடல் நலத்திற்கு கேடு. நீங்கள் பயன்படுத்தும் செம்பு வாட்டர் பாட்டில்களையும், முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

copper-kudam

இந்த, உப்பு, எலுமிச்சை பழ சாரு சேர்த்த கலவையை, வாட்டர் கேன் சுத்தப்படுத்தும் பிரஷ்ஷில் தொட்டு, வாட்டர் கேனின், உள்பக்கத்தில் நன்றாக தேய்த்தால், வாட்டர் கேன் உள் பக்கமும் பளிச்சென்று மாறிவிடும். இறுதியாக ஒருமுறை, செம்பு வாட்டர் கேன் உள்ளே, ஒரு ஸ்பூன் அளவு கல் உப்பை போட்டு, கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து, நன்றாக குலுக்கி கழுவி சுத்தம் செய்து விட்டீர்கள் என்றால் உங்களது செம்பு வாட்டர் கேன் புதியது போல மாறிவிடும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் பிளாஸ்டிக் வாட்டர் கேன் இருந்தாலும் கூட, அதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து எலுமிச்சை பழச் சாறு ஊற்றி, நன்றாக குலுக்கி கழுவினார்கள் என்றால், அந்த வாட்டர் கேனில், பிளாஸ்டிக் வாடை வராமல், உங்களது வாட்டர் கேன் எப்போதுமே சுத்தமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
வேண்டிய வரத்தை உடனே தரும் ‘வரலட்சுமி நோன்பு’ 31/7/2020 அன்று மிக எளிமையாக எப்படி மேற்கொள்வது? புதிதாக விரதம் இருப்பவர்கள் இதை செய்யலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -