செப்பு பாத்திரங்களை இந்த முறையில் பராமரித்தால், பாத்திரங்கள் கறுத்துப் போய் அடிக்கடி தேய்க்க வேண்டிய அவசியமே இருக்காது.

copper vessels cleaning
- Advertisement -

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவது நம் உடலுக்கு எத்தனை ஆரோக்கியமானது என்று பலருக்கும் தெரிந்திருக்கும். இது தெரிந்து இருந்தாலும் கூட அதை பெரும்பாலும் நாம் பயன்படுத்துவதில்லை. இதற்கு காரணம் அதை பராமரிப்பது சற்று சிரமம் என நினைப்பதால் தான். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் அந்த செப்பு பாத்திரத்தை ரொம்பவே சுலபமாக சுத்தம் செய்து நீண்ட நாள் கருகாமல் பாதுகாப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செப்புப் பாத்திரங்களை நாம் எப்படி சுத்தம் செய்தாலுமே கூட, தேய்த்து அடுத்த நாளே அதில் கருப்பு படிந்து அசிங்கமாகி விடும். அதற்காகவே அதை தினமுமே தேய்க்க வேண்டிய வேலை இருக்கும். இந்த காரணத்தினாலே பலரும் செப்பு பாத்திரம் பயன்படுத்துவதை தவிர்த்து விடுகிறார்கள். அதற்கு வீட்டிலே இந்த ஒரு லிக்விட் தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். இந்த செப்பு பாத்திரம் எப்போதும் பளிச்சென்று இருப்பதுடன், அவ்வளவு சீக்கிரத்தில் கருத்தும் போகாது. வாங்க அது என்ன லிக்விட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

செப்பு பாத்திரங்களை சுத்தம் செய்யும் லிக்விட் தயாரிக்கும் முறை:
இதற்கு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இத்துடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து விடுங்கள். இதுக்கு சால்ட் உப்பு கல் உப்பு இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இத்துடன் பூந்திக் கொட்டை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து அந்தத் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பூந்திக் கொட்டை கிடைக்கவில்லை என்றால் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் அரை ஸ்பூன் அளவு சேர்த்து மூன்றையும் ஒன்றாக கலந்து பாட்டிலில் ஊற்றி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறை இந்த செப்புப் பாத்திரங்களை தேய்க்கும் போதும் இந்த லிக்வீட்டிலிருந்து கொஞ்சமாக ஊற்றி ஸ்க்ரப்பர் வைத்து லேசாக தேய்த்தாலே போதும் செப்பு பாத்திரங்கள் பளிச்சென்று மாறி விடும். செப்பு பார்த்திரங்களை சுத்தம் செய்த பிறகு, உடனே காட்டன் துணி வைத்து நன்றாக துடைத்த பின் அதை வெயிலில் சிறிது நேரம் காய வைத்த பிறகு எடுத்து பயன்படுத்த வேண்டும். இப்படி செய்யும் பொழுது நாம் உப்பு தண்ணீரை பயன்படுத்தி கழுவினால் அதன் மூலம் ஏற்படும் அந்த கறைகளும் கூட அதில் படியாமல் இருக்கும். அதே சமயத்தில் சீக்கிரத்தில் கறுத்தும் போகாது.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் எந்த வியாதி எதிலிருந்து வருகிறது என்று தெரியாத அளவிற்கு மோசமான ஒரு சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் எல்லாம் நூறு வயது வரை நோய் நொடியில் இல்லாமல் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று பிறக்கும் குழந்தைகள் முதற் கொண்டு வியாதியுடன் தான் பிறக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாக நம் வாழ்வியல் மாற்றம் என்றே சொல்லலாம். அதில் ஒன்று தான் நாம் இந்த செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்துவதை மறந்து போனது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கவே கூடாத ஒரு பூச்சி? இதை ஒழித்துக் கட்ட 1 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் ஷாம்பூ இருந்தா போதுமே!

இந்த முறையில் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தும் பொழுது அதை சுத்தம் செய்வதற்கான சிரமமும் இருக்காது. எனவே முடிந்த அளவிற்கு நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ நாமும் கொஞ்சம் நம்முடைய பழக்க வழக்கங்களை கொஞ்சம் பழைய நிலைக்கு மாற்றி கொள்ளத் தான் வேண்டும்.

- Advertisement -