- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவருடகணக்காக இழுபறியாக இருக்கும் கோர்ட் கேஸ் பிரச்சனை ஒரு முடிவுக்கு வர பரிகாரம்.

வருடகணக்காக இழுபறியாக இருக்கும் கோர்ட் கேஸ் பிரச்சனை ஒரு முடிவுக்கு வர பரிகாரம்.

- Advertisement -

சில பேருக்கு சில கோர்ட் கேஸ் பிரச்சனை எல்லாம் ஹனுமன் வால் போல நீண்டு கொண்டே செல்லும். அதற்கு ஒரு முடிவே இருக்காது. வருட கணக்கில் கோர்ட் வாசப்படி ஏறி இறங்குவார்கள். இந்த கேசை ஜெயித்தால் என்னுடைய பல கோடி ரூபாய் கடன் அடையும். நிம்மதியாக ஒரு நாள் தூங்குவேன் என்று சொல்லுபவர்கள் கூட ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

நியாயம் 100% உங்கள் பக்கம் இருக்கிறது ஆனால் கோர்ட்டு கேஸ் வழக்கு முடியவே இல்லை எதிராளிக்கு சாதகமாகவே வழக்கு நகர்ந்து செல்கிறது என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பக்கத்தில் சிவபெருமான் உங்கள் கோர்ட் கேஸ் வழக்கை உடனடியாக தீர்த்து வைப்பார். அதற்கு என்ன பரிகாரம் செய்யணும் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கோர்ட் கேஸ் பிரச்சனை தீர

உங்க வீட்டு பக்கத்தில் சிவன் கோவில் இருக்க வேண்டும். பெரும்பாலான சிவன் கோவிலில் வன்னி மரம், வில்வமரம் ஏதாவது ஒன்று கட்டாயம் இருக்கும். தல விருட்சமாக இந்த மரத்தை வைத்திருப்பார்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை சூரியன் உதயம் ஆவதற்கு முன்பாகவே அந்த மரத்தை 21 முறை வளம் வந்து, சிவபெருமானை வேண்டிக் கொண்டால், உங்கள் கோர்ட்டு கேஸ் வழக்கு சீக்கிரமாக முடிந்து விடும். இதை எத்தனை நாள் செய்யணும். 21 நாள் செய்யலாம். தவறு கிடையாது. இருப்பினும் உங்கள் கோர்ட்டு கேஸ் வழக்கு முடியும் வரை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு.

எங்க வீட்டு பக்கத்தில் சிவன் கோவில் இருக்கிறது. ஆனால் தலவிருட்சம் இல்லை. வன்னி மரமும் இல்லை, வில்வ மரமும் இல்லை என்ன செய்வது. சிவபெருமானே வில்வமரம், சிவபெருமானே வன்னி மரம் என்று நினைத்துக் கொண்டு அந்த சிவன் ஆலயத்தை 21 முறை வலம் வரவும். மனது சுத்தமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

மனதை ஒருநிலைப்படுத்தி இந்த பிரபஞ்சத்திடம் உங்கள் வேண்டுதலை வைக்க வேண்டும். சிவபெருமான் காதலியே போய் இந்த வேண்டுதலை சொல்வது போல நினைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் பிரச்சனை நிச்சயம் தீரும் என்பது நம்பிக்கை. பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் இந்த வழிபாடை செய்வது தான் சிறப்பு.

முடியாதவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எங்கள் வீட்டு பக்கத்தில் கோவில் திறக்கப்படாது என்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வீட்டில் எழுந்து மௌன விரதம் இருக்க வேண்டும். அதாவது யாரிடமும் பேசாமல் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டிருங்கள்.

இதையும் படிக்கலாமே: அவசர பண தேவையை பூர்த்தி செய்யும் குறியீடு.

கோவில் திறக்கும் நேரத்தில் கோவிலை வளம் வந்த பிறகு நீங்கள் எப்போதும் போல பேசலாம். அதேபோல பிரம்ம முகூர்த்த நேரத்தில் காலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று 21 முறை வலம் வரும் வரை கூட, நீங்கள் யாரிடமும் பேசக்கூடாது. ஒரு தவம் போல இந்த ஆன்மீகம் வழிபாட்டை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.

சற்று முன்