பழைய கவரிங் செயினை புதிது போல் மாற்ற டிப்ஸ்.

covering chain cleaning
- Advertisement -

தங்கம் விற்கும் விலையில் அனைவராலும் தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலை என்பது இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் விசேஷங்களுக்கு செல்லும் பொழுது கை கொடுத்து உதவுவதுதான் கவரிங் நகைகள். அப்படிப்பட்ட கவரிங் நகைகள் என்றுமே புதிது போல் இருப்பதற்கும் கருமை நிறம் மாறவும் செய்ய வேண்டிய எளிய டிப்ஸை பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கௌரவத்தை நிலை நாட்ட உதவும் கூடியதுதான் தங்க நகைகள். தங்க நகைகள் வாங்க இயலாதவர்கள் தங்களுடைய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தங்க நகைகள் போல் மின்னும் கவரிங் நகைகளை உபயோகப்படுத்துவார்கள். அப்படி உபயோகப்படுத்தும் பொழுது அந்த நகைகள் நாளடைவில் கருத்துப் போக வாய்ப்பு இருக்கிறது. அப்படி கருத்துப்போல சூழ்நிலையில் அதை கடையில் கொடுத்து பாலிஷ் செய்வதை விட வீட்டிலேயே எந்த முறையில் சுத்தம் செய்து பழைய நகைகளும் புதிது போல் தோன்றும் தோற்றமளிக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது எலுமிச்சம் பழச்சாறு. நாம் எந்த நகையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த நகையை ஒரு கிண்ணத்தில் போட்டு அந்த நகை மூழ்கும் அளவிற்கு எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து விட வேண்டும். பிறகு இந்த நகை எலுமிச்சம்பழ சாறிலேயே பத்து நிமிடம் ஊற வேண்டும். கூறிய பிறகு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த நகையில் இருக்கக்கூடிய பச்சை நிறமோ அல்லது கருமை நிறமும் வெளியில் சென்று விடுவதை நம்மால் பார்க்க முடியும்.

பிறகு அதில் சிறிது பல் தேய்க்கும் பேஸ்ட்டையும், பழைய பிரஸ்ஸையும் உபயோகப்படுத்தி நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தேய்ப்பதன் மூலம் நகைகளுக்குள்ளும் இருக்க கூடிய அழுக்குகள் நீங்கும். பேஸ்ட் இல்லாதவர்கள். பாத்திரம் தேய்க்கும் டிஷ்வாசையோ அல்லது சோப்பையோ உபயோகப்படுத்தலாம். பிறகு சுத்தமான தண்ணீரை வைத்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நகையில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கி நகை புதிது போல் தோற்றமளிக்கும்.

- Advertisement -

இதைவிட இன்னும் பிரகாசமாக திகழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறிது மஞ்சள் தூளில் தண்ணீர் ஊற்றி நன்றாக குழப்பி அந்த நகை முழுவதும் மஞ்சளை தடவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புதிய நகைப் போல் மின்னும் அளவிற்கு பழைய நகைகள் தோற்றமளிக்கும். பிறகு அதை மறுபடியும் தண்ணீரில் கழுவி விட்டு ஈரத்தை நன்றாக துடைக்க வேண்டும். பிறகு நாம் முகத்திற்கு உபயோகப்படுத்தும் பவுடரை அதன் மேல் தடவி ஐந்து நிமிடம் வைத்திருந்து பிறகு ஈரம் இல்லாத துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கேஸ் சிலிண்டர் செலவை மிச்ச படுத்த வீட்டுக் குறிப்பு

அவ்வப்பொழுது புதிது புதிதாக கவரின் நகைகளை வாங்குவதை தவிர்த்து விட்டு ஒரே ஒரு முறை வாங்கி அதை நம் வாழ்நாள் முழுவதும் புதிது போல் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -