கேஸ் சிலிண்டர் செலவை மிச்ச படுத்த வீட்டுக் குறிப்பு

stove pan tablet strip
- Advertisement -

பெரும்பாலும் நாம் வீட்டில் பயன்படுத்தியது போக தேவையில்லை என நினைத்து தூக்கிப் போடும் பல பொருட்கள் நம் வீட்டு வேலைகளை மிகவும் எளிதாக செய்யவும் நம்முடைய பணத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் மாத்திரைகளை பயன்படுத்தாத வீடு எதுவுமே இல்லை என்று சொல்லலாம். அப்படி நாம் பயன்படுத்திய பிறகு தூக்கிப் போடும் இந்த மாத்திரை அட்டையை வைத்து என்னென்ன விசயங்களை செய்யலாம் என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு:1
கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்யும் போது மேலிருக்கும் பகுதிகளை எல்லாம் எளிதாக சுத்தம் செய்து விடுவோம். ஆனால் கேஸ் ஆன் ஆப் செய்யும் அந்த இடத்தின் இடுக்கில் அதிகப்படியான அழுக்கு எண்ணெய் பிசுக்கு சேர்ந்திருக்கும். அதை சுத்தம் செய்வதும் கொஞ்சம் கடினமான காரியம் தான். இதற்கு மாத்திரை அட்டையை நம் விரல் அளவிற்கு நீளமாக நறுக்கி அதை வைத்து இந்தப் பகுதிகளில் தேய்த்தால் உள்ளே இருக்கும் அழுக்கு எண்ணெய் பிசுக்கு மொத்தமும் வெளியே வந்து விடும்.

- Advertisement -

குறிப்பு: 2
கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்ய லிக்விட் அல்லது பேக்கிங் சோடா, லெமன், தண்ணி என எதையாவது சேர்த்து தான் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது ஸ்கிரப்பர் பயன்படுத்தினால் ஸ்டவ் மீது கோடுகள் விழுந்து விடும். இதையுமே கூட மாத்திரை அட்டை வைத்து சுலபமாக செய்து விடலாம்.

அதுவும் ஒரு சொட்டு தண்ணீர் கூட செலவழிக்காமல். இதற்கு கொஞ்சம் பெரிய மாத்திரை அட்டையாக எடுத்துக் கொண்டு கறைகள் இருக்கும் இடத்தில் எல்லாம் லேசாக சுரண்டி விட்டு இந்த அட்டையை ஸ்டவ்வின் மீது லேசாக தேய்த்து விட்டால் அனைத்து அழுக்கும் வந்து விடும். அதன் பிறகு துணி வைத்து துடைத்து எடுத்தால் ஸ்டவ் பளிச்சென்று இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 3
இப்போது கேஸ் மிச்சப்படுத்தக்கூ டிய அந்த குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் கேஸ் அதிகமாக செலவழிவதற்கு காரணம் பர்னரில் இருக்கும் அடைப்புகள் தான். இதனால் தேவையில்லாமல் கேஸ் வீணாக வெளியேறி சீக்கிரத்தில் காலியாகி விடும். இந்த பர்ணரை தான் இப்போது மாத்திரை அட்டை வைத்து சுத்தம் செய்யப் போகிறோம்.

அதற்கு முதலில் ஸ்டவ்வை பற்ற வைத்து பர்னரை லேசாக சூடு செய்து உடனே அணைத்து விடுங்கள். அதன் பிறகு மெல்லிய ஊசி போல இந்த மாத்திரை அட்டையை நறுக்கி அதை வைத்து பர்னரின் துளைகளுக்குள்ளே விட்டு எடுத்தால் அதன் உள்ளிருக்கும் அழுக்கு மொத்தமும் வெளிவந்து விடும். இதனால் பர்னர் அடைப்பில்லாமல் எரியும் கேசும் வீணாகாது. நாம் என்ன தான் ஊசி சேப்டிபின் வைத்து சுத்தம் செய்தாலும் கூட, இதையெல்லாம் அவ்வளவு எளிதில் வெளியே எடுக்க முடியாது

- Advertisement -

குறிப்பு: 4
சமைக்கும் போது சில சமயங்களில் பால் பாத்திரம் தீய்ந்து விடும் அல்லது ஏதாவது வேறு பாத்திரம் தீய்ந்து அடிப்பிடித்தும் விடும். அது போன்ற சமயங்களில் ஸ்க்ரப்பர் வைத்து அழுத்தி தேய்க்கும் பொழுது பாத்திரத்தில் போடு விழும். அதற்கும் இந்த மாத்திரை அட்டையை பயன்படுத்தலாம். அடிபிடித்த பாத்திரத்தில் கொஞ்சம் பெரிய துண்டு மாத்திரை அட்டை எடுத்து சுரண்டி விட்ட பிறகு லேசாக தண்ணீர் ஊற்றி தேய்த்தால் போதும் அழுக்கு கறைகள் அடி பிடித்த சுவடு கூட தெரியாது அளவிற்கு பாத்திரம் புதிதாக மாறி விடும்.

குறிப்பு: 5
இந்த மாத்திரை அட்டைகளை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு சுற்று ஓட விட்டு எடுத்து விடுங்கள். மிக்ஸி ஜாரின் பிளேட் நல்லா ஷார்ப்பாக மாறி விடும். இந்த குறிப்பை செய்த பிறகு மிக்ஸி ஜாரில் மீண்டும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வைத்து விட்டு அதன் பிறகு ஒரு முறை சுற்றி எடுத்து விடுங்கள்.ஏனெனில் மாத்திரை அட்டை சேர்த்து அரைக்கும் போது சின்ன சின்ன துகள்கள் ஒட்டி இருந்தால் இப்படி சுத்தம் செய்வதால் அவை அனைத்தும் நீங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: மருதாணி அரைக்காமலே அதை விட சூப்பரா 20 நிமிசத்தில உங்க கை செக்கச்வேன்னு கோவைப்பழம் போல சிவக்கானும்மா? இந்த நேச்சுரலான சிம்பிள் மெத்தடை யூஸ் பண்ணுங்க.

நாம் வேண்டாம் என நினைத்து தூக்கிப் போடும் இந்த மாத்திரை அட்டையில் நம் வீட்டிற்கு பயன்படும் எத்தனையோ விஷயங்களை சுலபமாக செய்ய உதவி செய்கிறது. இந்த குறிப்பு உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் இதையெல்லாம் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -