எப்பொழுதும் செய்யும் சப்பாத்தியை விட கொஞ்சம் க்ரஸ்பியாகவும், மசாலா சுவையுடனும் இருக்கும் இந்த ஸ்டஃப்டு சப்பாத்தியை ஒருமுறை செய்து கொடுங்கள். பின்னர் அடிக்கடி உங்கள் வீட்டில் இதுதான் உணவாக இருக்கும்

stuffed-chappathi
- Advertisement -

சப்பாத்தி பூரி என்பது பலரது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு உணவு வகை தான். என்றாலும் சப்பாத்தி செய்து அதனுடன் தொட்டுக்கொள்ள சென்னா மசாலா, உருளைக்கிழங்கு மசாலா மற்றும் தக்காளி தொக்கு இதுபோன்ற சைடிஷ் தான் அடிக்கடி செய்வதுண்டு. ஆனால் பெரிய அளவில் சைடிஷ் எதுவும் செய்யாமல் இந்த ஸ்டஃப்டு சப்பாத்தியை செய்து கொடுத்தால் போதும். குழந்தைகள் அழகாக சாப்பிட்டு முடிப்பார்கள். இதன் சுவையும் வாயில் வைத்த உடனே கிரிஸ்பியாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு இது எப்பொழுதும் செய்யும் சப்பாத்தியை விட மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஒரு முறை இதனை செய்து கொடுத்து பாருங்கள். மீண்டும் அடிக்கடி செய்து கொண்டே இருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பள்ளி செல்லும் பழுது காலையில் இதனை சட்டென செய்து அவர்களின் லஞ்ச் பாக்சில் வைக்க முடியும். வாருங்கள் இந்த சப்பாத்தியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், உருளைக்கிழங்கு – 3, பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 5, உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம், வெங்காயம் – 2, தனியா தூள் – அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைய வேண்டும். இறுதியாக இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து விட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்க வேண்டும். பின்னர் இதனை அப்படியே ஒரு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு மூன்று உருளைக்கிழங்கை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் உருளைக்கிழங்கு வெந்ததும் அதன் தோலை நீக்கி, உருளைக்கிழங்கை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பின் மீது ஒரு பே வைத்து அதில் மூன்று ஸ்பூன் எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதனை ஒரு தட்டில் மாற்ற வேண்டும். பிறகு அதே எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி வைக்க வேண்டும்.

பின்னர் வரமிளகாயை மிக்ஸி ஜாகிர் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். பிறகு அதே கிண்ணத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் வறுத்து வைத்துள்ள வெங்காயம், சீரகத் தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி திரட்டி, தோசைக்கல்லில் வைத்து இரண்டு புறமும் நன்றாக சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதன் நடுவே இந்த மசாலாவை வைத்து, சப்பாத்தியை மடித்து விட்டு, எண்ணெயில் சிறிது நேரம் வறுத்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சப்பாத்தி தயாராகிவிட்டது.

- Advertisement -