உருளைக்கிழங்கை வைத்து இப்படி சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்

potato
- Advertisement -

உருளைக்கிழங்கு ரிங்ஸ் ஒரு சுவையான மாலை நேர உணவு வகை.  இது உருளைக்கிழங்கு, ரவா, பூண்டு ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. வழக்கமான ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதுமையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையிலான ஸ்னாக்ஸ். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மிகவும் எளிமையான முறையில் செய்யலாம்.  பிஸ்கட், சாக்லேட் போன்ற எப்போதும் ஒரே மாதிரி ஸ்நாக்ஸ் வகைகளை காட்டிலும் இது போன்ற வித்தியாசமான ஸ்நாக்ஸ் வகைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வாருங்கள் இந்த சுவையான உருளைக்கிழங்கு ரிங்ஸை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 3, ரவை – 1/2 கப், வெண்ணை –  2 ஸ்பூன், பூண்டு பற்கள் – 3, சில்லி ப்ளேக்ஸ் – 1 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – 250 கிராம்.

- Advertisement -

செய்முறை:
உருளைக்கிழங்கை மென்மையாக வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும். அதனை கேரட் துருவும் கட்டையில் வைத்து சமமாக துருவிக் கொள்ளவும்.ஒரு  மிக்ஸி ஜாரில் அரை கப்  ரவை சேர்த்து கொள்ளவும். அதனை நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பானில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் சூடானதும் மூன்று  பூண்டு பற்களை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும்.

பூண்டு ஓரளவு வதங்கிய பின்னர் ஒரு ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள ரவையை சேர்த்து வேக வைக்கவும். ரவை நன்கு வெந்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும். ரவையும் உருளைக்கிழங்கும் நன்கு கலக்கும் வரை கிளறவும். அடுப்பை அனைத்து ஆற விடவும்.  ஆறிய பின்னர் சப்பாத்தி மாவு போன்று நன்கு பிசைந்து கொள்ளவும்.

- Advertisement -

அதனை சப்பாத்தி கல்லில் எண்ணெய் தடவி அல்லது பட்டர் பேப்பர் போட்டு அதன் மேல் வைக்கவும். சப்பாத்தி கட்டை கொண்டு   1/4 இன்ச்  அளவிற்கு தேய்த்துக் கொள்ளவும். ஒரு குக்கீ கட்டர் அல்லது பாட்டில் மூடிக்கொண்டு சிறுசிறு வட்டமாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு சிறிய பாட்டில் மூடி அல்லது சிறிய குக்கி கட்டர் கொண்டு நடுவில் வெட்டி எடுக்கவும்.

இப்பொழுது உருளைக்கிழங்கு ரிங்ஸ் பொரிக்க தயாராக உள்ளது. ஒரு கடாயில் எண்ணெய் சூடு படுத்திக் கொள்ளவும்,  மிதமான சூட்டை விட சற்று கூடுதலாக வைத்துக் கொள்ளவும். தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு ஒவ்வொன்றாக சேர்க்கவும்.ஓரளவு சிவந்த பின்னர் திருப்பி போடவும். நுரை ஓரளவு அடங்கிய பின்னர் அல்லது பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே எடுக்கவும், சுவையான உருளைக்கிழங்கு ரிங்ஸ் தயாராகிவிட்டது.

- Advertisement -