மிக்ஸியில் மாவு அரைத்து மெதுவடை செய்தாலும் எண்ணெய் குடிக்காது. வடை சாஃப்டாக மொறுமொறுவென வரும். இந்த 2 டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க!

sadam-vadai
- Advertisement -

நிறைய பேர் வீட்டில் உளுந்து வடை செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா. கிரைண்டரில் உளுந்து மாவு அரைக்க வேண்டும் என்ற கஷ்டம்தான். கொஞ்சமாக மாவு போட்டு, கொஞ்சமாக வடை செய்வதற்கு எவ்வளவு பெரிய கிரைண்டரில் மாவு ஆட்டி கிரைண்டரை சுத்தம் செய்வது என்ற சோம்பேறித்தனம். இனி இந்த கவலை வேண்டாம். 100 கிராம் அளவு உளுந்தை ஊறவைத்து மிக்ஸி ஜாரில் மாவு அரைத்து, எண்ணெய் குடிக்காத மொறு மொறு சூப்பர் வடையை செய்ய முடியும். அது எப்படி. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ulunthu

முதலில் 100 கிராம் அளவு உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 முறை கழுவி, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மணிநேரம் ஊறிய பின்பு உளுந்தில் இருக்கும் எல்லா தண்ணீரையும் வடித்துவிட்டு, உளுந்தை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஜாரில் போட்ட உளுத்தம்பருப்பை மிக்ஸியில் அப்படியே ஒரே அடியாக ஓட விடக்கூடாது. மிக்ஸியை பல்ஸ் பட்டனில் விட்டுவிட்டு தான் அரைக்க வேண்டும். முதலில் தண்ணீர் எதுவும் ஒரு சொட்டு கூட ஊற்றாமல் பல்ஸ் பட்டனை 4 முறை விட்டுவிட்டு ஓட்டி விடுங்கள். உளுந்து ஒன்றும் இரண்டுமாக அரைந்துவிடும்.

ஒன்றும் இரண்டுமாக அறைந்த உளுந்தம் பருப்பில், ஒரு குழி கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் மிக்ஸியை விட்டுவிட்டு அரைக்க வேண்டும். பல்ஸ் பட்டனில் தான், மாவு முழுவதும் நைஸாக அரையும் வரை, மிக்ஸியை ஓட்ட வேண்டும். தவிர ஒரேயடியாக பருப்பை ஓடவிட்டால் பருப்பு சூடாகி நீர்த்துவிடும். இப்படி மிக்ஸியை விட்டுவிட்டு ஓட்டி அரைக்கும்போது உளுந்து உபரியாக கிடைக்கும். அதேசமயம் நீர்த்துப் போகாது. கொஞ்சம் கொஞ்சமாக குழி கரண்டியில் தண்ணீர் விட்டு அரையுங்கள். (Tip no 1: பல்ஸ் பட்டனை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.)

- Advertisement -

மாவை நைஸாக அரைத்து எடுத்து மிக்சி ஜாரில் இருக்கும் மாவை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். மிக்ஸியில் அரைத்த உளுந்த மாவில் வடை செய்வதாக இருந்தால் கட்டாயமாக அரிசி மாவு சேர்க்க வேண்டும். 100 கிராம் அளவு உளுந்தம் மாவுக்கு, இரண்டு கைப்பிடி அளவு வரை அரிசி மாவு சேர்க்கலாம்.

vadai3

உளுந்தம் மாவை நீங்கள் எப்படி அரைக்கிரீக்கிறீர்களோ அந்த அளவிற்கு பக்குவம் பார்த்து, அரிசி மாவை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அதாவது மாவை ரொம்ப தண்ணீர் ஊற்றி அரைத்துவிட்டால், கொஞ்சம் அதிகப்படியான அரிசிமாவு தேவைப்படும். மாவு சரியான பக்குவத்தில் அறிந்திருந்தால் அரிசிமாவை குறைத்துக் கொள்ளலாம்.

methu-vadai1

இப்போது உளுந்த மாவும் அரிசி மாவும் சேர்ந்து இருக்கும் கலவையில், மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து உங்களுடைய ஐந்து விரல்களையும் அகட்டி வைத்துக் கொண்டு, இந்த மாவை 5 நிமிடங்கள் நன்றாக அழுத்தம் கொடுக்காமல் கலந்து விட வேண்டும். அப்போதுதான் வடை கல்லு மாதிரி இல்லாமல் சாஃப்டாக கிடைக்கும். (Tip no 2: வடை மாவை உங்கள் கைகளால் பக்குவமாக கலந்து கொடுத்தால் தான் வடை சாஃப்டாக வரும்.) தேவைப்பட்டால் இறுதியாக இரண்டு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து இந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான வடை கிடைக்கும்.

- Advertisement -