ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் இத்தனை நன்மைகளா?

crystal-lingam

நமது ஆன்மீகத்தின் கருத்துப்படி பிரபஞ்சத்தின் உயர்ந்த சக்தியாக கூறப்படுவது அந்த எம்பெருமானை தான். பொதுவாக கோவிலில் இருக்கும் லிங்கங்கள் கருங்கற்களினால் உருவாக்கப்பட்ட லிங்கங்களாக அல்லது சுயம்பு லிங்கங்களாக இருக்கும். இதில் என்ன குறிப்பாக ஸ்படிக லிங்கத்திற்கு மட்டும் அவ்வளவு பெரிய அற்புதம் இருக்கின்றது என்றால், ‘ஒரு ஸ்படிக லிங்கமானது, கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கத்திற்கு சமம்’ என்று கூறுகிறது சாஸ்திரம். உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் இதுதான் நிஜம். ஆயிரம் லிங்கத்தை வழிபட்டால் கிடைக்கும் புண்ணியமும், ஆயிரம் லிங்கத்திலிருந்து நமக்கு கிடைக்கப் பெறும் ஆசையும், இந்த ஒரு ஸ்படிக லிங்கத்தை வைத்து வழிபட்டால் நம்மால் பெறமுடியும். ஸ்படிகம் என்ற பொருளானது சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரனில் இருந்து விழுந்த துளியிலிருந்து உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ‘கிரிஸ்டல்’ என்று கூறுகிறார்கள். ஸ்படிகம் இமய மலையின் அடி வாரத்தில் ஆழமான பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்தது. இதன் தோற்றம் தூய்மையான கண்ணாடி போன்று இருக்கும். சந்திரனைப் போலவே குளிர்ந்த தன்மையும் கொண்டது. இந்த லிங்கம் கண்ணாடியின் தன்மையை கொண்டுள்ளதால், நம் மனதில் என்ன நினைக்கின்றோமோ, அதை இந்த ஸ்படிக லிங்கமானது பிரதிபலிக்கும் என்றும் கூறுகிறார்கள். இதனால் இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் நிச்சயம் தூய்மையான மனதோடு தான் வழிபட வேண்டும். எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது.

crystal-lingam1

அதாவது நமக்குப் புரியும்படி கூறினால், இந்த ஸ்படிக லிங்கத்திற்கு என்று எந்தவிதமான நிறமும் கிடையாது. ஆனால் இந்த ஸ்படிக லிங்கத்திற்கு பின்னால் நாம் வைக்கப்படும் பொருளின் நிறத்தை அப்படியே பிரதிபலிக்கும். உதாரணத்திற்கு இந்த லிங்கத்தின் பின்புறத்தில் சிகப்பு செம்பருத்தி பூவினை வைத்தால் சிவப்பு வர்ணத்தை காட்டும். பச்சை துளசியை வைத்தால் அந்த பச்சை துளசியின் பிம்பம் இதில் தெரியும். இப்படியாக நம் மனதில் நல்லதை நினைத்து வேண்டினால் நல்லது நடந்துவிடும். கெட்டதை நினைத்து வேண்டினால் கேட்டது நடந்துவிடும். ஸ்படிக லிங்கத்தின் முன்பு நாம் என்ன வேண்டுதல்களை கேட்கின்றோம் அது நிச்சயமாக நடந்துவிடும் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் உண்மை.

இந்த ஸ்படிக லிங்கத்தின் முன்பு சிவபெருமானை மனதில் நினைத்து தான் வேண்ட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நீங்கள் மகாலட்சுமியின் மந்திரத்தை ஓதினால் உங்களுக்கு மகாலட்சுமியின் ஆசையானது கிடைக்கும். மாணவர்கள் சரஸ்வதி தேவியை நினைத்து நன்றாக படிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஸ்படிக லிங்கத்தை ஒரு ஐந்து நிமிடம் உற்றுநோக்கினால் நல்ல நினைவாற்றல் பெருகும். நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும் என்று குபேரரை நினைத்து பூஜித்தால் உங்களது வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். இப்படி நாம் மனதார எதை நினைத்து வேண்டுகின்றோமோ அதன் பிரதிபலன் நமக்கு முழுமையாக கிடைத்துவிடும் என்ற ஒரு சிறப்பு இந்த ஸ்படிக லிங்கத்திற்கு நிச்சயம் உள்ளது.

crystal-lingam2

இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் தினந்தோறும் பூஜை செய்து வழிபட வேண்டும். அந்த லிங்கத்திற்கு காய்ச்சாத பால், பழரசம், பன்னீர், மஞ்சள் கலந்த தண்ணீர், அல்லது சுத்தமான வெறும் தண்ணீர் இவைகளில் ஏதாவது ஒன்றை வைத்து அபிஷேகம் செய்து பூவினால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டி தினந்தோறும் நெய்வேதியம் படைத்து வழிபட்டு வந்தால் நமக்கு நாம் வாழ்வில் எதிர்பார்க்க முடியாத நன்மைகளும் கூட கிடைக்கும்.

- Advertisement -

crystal-lingam3

மற்றவர்களால் நமக்கு ஏற்படும் ஏவல், பில்லி, சூனியம் போன்றவைகள் கூட நம்மை வந்து தாக்காது என்று கூறுகிறது சாஸ்திரம். ஆனால் இந்த ஸ்படிக லிங்கத்தை பயன்படுத்துபவர்கள் நல்ல மனதோடு மற்றவர்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கெட்ட எண்ணத்தோடு மற்றவர்களுக்கு கெடுதல் செய்யவேண்டுமென்று இந்த லிங்கத்தின் முன்பு ஒரு நொடிகூட வேண்டிக் கொள்ள வேண்டாம். இப்படிப்பட்ட மகிமைகளை கொண்ட ஸ்படிக லிங்கத்தின் முன்பு அனைவரும் நலமாக இருக்க வேண்டும். நாடு வளம் பெற வேண்டும் என்ற வேண்டுதலை தினம்தோறும் வைப்பது நல்லது. உங்களின் எதிரிகள் கூட கெட்டது நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளாதீர்கள். அந்த கெட்டது கூட நிச்சயம் நடந்து விடும். அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்யும் பாவம் நமக்கு எதற்கு? நல்லதை விதைத்தவர்களுக்கு நல்லது கிடைக்கும். கெட்டதை விதைப்பவர்களுக்கு கெட்டது கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
நாம் பருகும் சாதாரண தண்ணீர், ஆன்மீகத்தில் மட்டும் எப்படி புனித தீர்த்தம் ஆகிறது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Spatika lingam puja at home in Tamil. Crystal lingam Benefits in Tamil. Crystal shiva lingam benefits. Crystal lingam use.