- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் கல் உப்பு.

பண வரவை அதிகரிக்கும் கல் உப்பு.

- Advertisement -

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருட்களாக பல பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுவது தான் கல் உப்பு. மகாலட்சுமி திருப்பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவராக புராணங்கள் கூறுகின்றது. அப்படி கடலில் இருந்து மகாலட்சுமி தாயார் தோன்றியதால் கடலில் இருந்து பெறக்கூடிய பொருட்களிலும் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி கிடைக்கக்கூடிய பொருட்களில் ஒன்றுதான் கல் உப்பு. கல் உப்பை நம்முடைய சமையல் அறையில் எந்த இடத்தில் வைத்தால் பணவரவு அதிகரிக்கும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்ப்போம்.

பணம் சேர கல் உப்பு

பொதுவாக வீட்டில் கல் உப்பு நிறைந்து இருக்க வேண்டும். கல் உப்பு குறையவே கூடாது. எந்த அளவிற்கு கல் உப்பு நம்முடைய வீட்டில் இருக்கிறதோ அந்த அளவிற்கு நமக்கு பணவரவும் ஏற்படும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் கல்லுப்பை வைத்து பல பரிகாரங்களை இருக்கின்றன.

- Advertisement -

பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய ஒரு முக்கியமான இன்றியமையாத பொருளாக கருதப்படுவது தான் கல் உப்பு. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவார்கள். என்னதான் அயோடின் கலந்த தூள் உப்பை பயன்படுத்தினாலும் கல்லுப்பை பயன்படுத்துவதற்கு இணையாகாது என்றும் கூறப்படுகிறது.

தினமும் வீட்டில் இருக்கும் பெண்கள் குளிக்காமல் கல் உப்பை தொடக் கூடாது என்றும் கல் உப்பை தங்களுடைய கைகளில் தான் எடுக்க வேண்டும் என்றும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கிறது. சரி இப்படிப்பட்ட கல் உப்பை சமையலறையில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் எப்படி வைத்தால் பணவரவு அதிகரிக்கும் எப்படி வைக்கக் கூடாது என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக கல் உப்பை பிளாஸ்டிக் அல்லது சில்வர் பாத்திரங்களில் வைக்கக்கூடாது. மண் பானை அல்லது பீங்கான் ஜாரில் தான் வைக்க வேண்டும். இது பலரும் அறிந்ததே. பொதுவாக அனைத்து இல்லங்களிலும் கிழக்கு முகம் பார்த்தவாறு தான் சமையல் செய்வோம். அப்படி சமையல் செய்யும் பொழுது நம்முடைய வலது கைப்பக்கம் கல் உப்பு இருக்க வேண்டும். அதாவது தென்கிழக்கு மூலையில் இருப்பது போல் வைக்க வேண்டும்.

அதேபோல் நாம் எடுக்கும் தூரத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நம்முடைய தேவைகள் பூர்த்தி ஆவதற்குரிய பண வரவு நமக்கு கிடைக்கும் என்றும், அதே தூரத்தில் சிரமப்பட்டு எடுக்கிறோம் என்றால் நமக்கு பண வரவும் சிரமப்பட்டு தான் வரும் என்று கூறப்படுகிறது. அதே போல் எக்காரணம் கொண்டும் கல் உப்பை சமையலறையில் சிங்கிற்கு பக்கத்தில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் பணவரவு ஏற்படுவது கடினமாகும். அதே போல் கல்லுப்பை சுத்தம் இல்லாத நாட்களில் குளிக்காமல் தொடக் கூடாது.

இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சனைகள் தீர தீபம்

இதில் நம்பிக்கை இருக்கும் பெண்கள் இந்த வழிமுறைகளை தங்களுடைய சமையலறையில் பின்பற்றும் பொழுது மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக அந்த வீட்டிற்கு வருகை புரிந்து பணவரவை அதிகரிப்பாள்

சற்று முன்