பருப்பே சேர்க்கமா பத்து நிமிஷத்துல கமகமன்னு வீடு மணக்குற அளவுக்கு காய் சாம்பார் செய்யனும்ன்னா இந்த சீக்ரெட் மசாலாவை அரைச்சு சாம்பார் வைச்சிடுங்க.

araithu vitta sambar
- Advertisement -

இப்பொழுதெல்லாம் பருப்பு சேர்க்காமல் வெறும் வெங்காயம் தக்காளி வைத்து அல்லது பொட்டுக்கடலை வைத்து டிபனுக்கு சாம்பார் செய்வதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். சாம்பார் என்றாலே அது பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு டிஷ் தானே, அப்படித் தான் இது வரையில் நாம் அறிந்து வைத்திருப்போம். ஆனால் காய் சாம்பார் பருப்பை சேர்க்காமல் நல்ல ருசியுடன் செய்யலாம் என்பது கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது அல்லவா. வாங்க அந்த சாம்பார் ரெசிபி எப்படி என்று தான் தெரிந்து கொள்வோமே.

செய்முறை

இந்த சாம்பார் செய்ய முதலில் ஒரு மசாலாவை நாம் அரைக்க வேண்டும் அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை ஒரு வெங்காயத்தை மீடியம் துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு தக்காளி அதையும் நறுக்கி சேர்த்து பிறகு மூன்று டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் கொஞ்சமாக புளி இவை அனைத்தையும் சேர்த்த பிறகு லேசாக தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது சாம்பாரை தாளித்து விடுவோம். அதற்கு குக்கரில் உங்களுக்கு இந்த சாம்பாருக்கு எந்தெந்த காய்கள் செய்ய விருப்பமோ அவைகள் அனைத்தையும் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் உப்பு என இவை அனைத்தையும் சேர்த்த பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவையும் இதில் சேர்த்து கால் கப் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள் .

இப்போது அடுப்பை பற்ற வைத்து தயார் செய்து வைத்த சாம்பாரை அதில் வைத்த பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்த பிறகு நன்றாக கலந்து மூடி போட்டு மூடி விடுங்கள். குக்கர் இரண்டு விசில் வரும் வரை காத்திருங்கள். அதன் பிறகு அடுத்து அணைத்து விடுங்கள். குக்கர் விசில் இறங்கிய பிறகு மூடியை திறந்து பாருங்கள். நல்ல கம கமன்னு என்று வாசனை உடன் பருப்பு சேர்க்காத காய் சாம்பார் தயார்.

- Advertisement -

இந்த சாம்பாரை அப்படியே கூட நீங்கள் சாப்பிடலாம் ஆனால் தாளித்து சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகமாக இருக்கும். அதற்கு ஒரு தாளிப்பு கரண்டியில் கொஞ்சம் கடலை எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை உருவி சேர்த்து பொரிந்த பிறகு தாளிப்பை சாம்பாரில் ஊற்றி விடுங்கள். சாம்பார் இன்னும் கமகமவென்று வாசனை வீசும்.

இதையும் படிக்கலாமே: சாதாரண இட்லியை சத்தான இட்லியாக மாற்றுவதற்கு இட்லி மாவு அரைக்கும் போது அதோட கொஞ்சம் இந்த பொருளையும் சேர்த்து அரைங்க…

இந்த சாம்பார் செய்ய அதிகபட்சம் பத்து நிமிடம் கூட ஆகாது. ஆனால் அட்டகாசமான சுவையில் வீடு மணக்கும் அளவுக்கு சாம்பார் தயாராகி விடும். இந்த சாம்பார் ரெசிபி மட்டும் உங்களுக்கு தெரிஞ்ச இனி எப்போ சாம்பார் வச்சாலும் இதையே தான் செய்வீங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -