புளிச்சு போன தயிர் கொஞ்சம் இருந்தா போதும் பழைய கொலுசு எல்லாமே புதுசா மின்னுமே! எப்படி?

curd-paste-kolusu-clean
- Advertisement -

நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் கொலுசு சீக்கிரமே கருப்பாக மாறுவதற்கும் சம்பந்தம் உண்டு. உப்பு கரிந்த தண்ணீரில் வெள்ளி கொலுசுகள் இது போல ரொம்பவே கருப்பாக மாறி விடுகிறது. அது மட்டும் அல்லாமல் சாக்கடை மற்றும் கடல் ஓரங்களில் வசிப்பவர்களுக்கும் இது போல அடிக்கடி கருப்பாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. காற்று மற்றும் தண்ணீர் இந்த ரெண்டும் சுத்தமாக இருந்தால் தான் நாம் பயன்படுத்தும் கொலுசு ரொம்ப நாளைக்கு புதுசு போலவே இருக்கும். சரி, இப்படி கருப்பாக மாறிய கொலுசையும் புதுசு போல மீண்டும் மாற்றுவதற்கு ரொம்ப எளிமையான வழி என்ன? என்பதைத் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வாங்கிய புதிதில் நன்றாக பளிச்சென்று இருந்த வெள்ளி கொலுசுகள், வெள்ளி பாத்திரங்கள் காற்றில் இருக்கக் கூடிய மாசுக்களினால் அதன் பொலிவை சீக்கிரமே இழந்து விடுகிறது. இந்த இழந்த பொலிவை மீண்டும் மீட்டு எடுக்க ஒரு கப் தயிர் இருந்தாலே போதும். உங்களிடம் புளித்த தயிர் இருந்தால் அதை முந்தைய நாள் இரவே ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த புளித்த தயிரில் நீங்கள் உங்களுடைய கொலுசை முழுவதுமாக எல்லா இடங்களிலும் படும்படி நன்கு நனைத்து ஊற விட்டு விடுங்கள். மறுநாள் காலை வரை அப்படியே அதை ஊற வேண்டும்.

- Advertisement -

காலையில் எழுந்து தயிரில் மூழ்கி இருக்கும் கொலுசை எடுத்து பழைய டூத் பிரஷ் பயன்படுத்தி நன்கு தேய்த்துக் கொடுங்கள். பிரஷ் கொண்டு தேய்க்கும் பொழுது கொஞ்சம் பல் தேய்க்கும் டூத் பேஸ்ட்டையும் சேர்த்து தேய்க்க வேண்டும். எந்த பிராண்ட் டூத் பேஸ்ட் ஆக இருந்தாலும் பரவாயில்லை. இந்த பற்பசையை கொண்டு தேய்க்கும் பொழுது நன்கு நுரைக்க ஆரம்பிக்கும். இண்டு இடுக்குகளில் கூட சுத்தம் செய்வதற்கு இது உதவியாக இருக்கும்.

புளித்த தயிரில் இருக்கும் ஒருவித அமிலம் கொலுசில் இருக்கக்கூடிய அழுக்குகளை முக்கால் பாகம் அப்பொழுதே அகற்றி இருக்கும். மீதம் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய இந்த பற்பசை பயன்படுகிறது. சாதாரணமான வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்ய பற்பசைக்கு பதிலாக டூத் பவுடரை பயன்படுத்தி பாருங்கள். டூத் பவுடரை ஈரம் படாமல் வெள்ளி பாத்திரங்களின் மீது வைத்து லேசாக கைகளால் தேய்த்துக் கொடுத்தால் போதும் பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சிடும்.

- Advertisement -

இது கொலுசு என்பதால் நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருக்கும் எனவே இந்த முறையை கையாளும் பொழுது தான் இதற்கு சரியாக வரும். கொஞ்சம் கொஞ்சம் பகுதியாக கொலுசு முழுவதும் இது போல தேய்த்துக் கொடுத்து, பின்னர் தண்ணீரில் அலசி கொள்ளுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது பார்ப்பதற்கு உங்களுடைய கொலுசு கருமை இல்லாமல் வெள்ளையாக நன்கு பளிச்சுன்னு இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
மருதாணி அரைக்காமலே அதை விட சூப்பரா 20 நிமிசத்தில உங்க கை செக்கச்வேன்னு கோவைப்பழம் போல சிவக்கானும்மா? இந்த நேச்சுரலான சிம்பிள் மெத்தடை யூஸ் பண்ணுங்க.

காலில் அணியக் கூடிய கொலுசுகள் மாதம் ஒரு முறை இது போல தயிரில் ஊற வைத்து சுத்தம் செய்யும் பொழுது நீண்ட நாட்களுக்கு உழைக்கும். பொதுவாக கொலுசுகள் வாங்கும் பொழுது அடர்த்தியாக வாங்க வேண்டும். அடர்த்தி குறைந்தால் சீக்கிரமே அறுந்து விடும் அபாயம் உண்டு. கொலுசில் நமக்கு நிறைய நஷ்டம் உண்டாகாமல் இருக்க அதிக முத்துக்களை தவிர்ப்பதும் நல்லது.

- Advertisement -