மருதாணி அரைக்காமலே அதை விட சூப்பரா 20 நிமிசத்தில உங்க கை செக்கச்வேன்னு கோவைப்பழம் போல சிவக்கானும்மா? இந்த நேச்சுரலான சிம்பிள் மெத்தடை யூஸ் பண்ணுங்க.

mehanthi hand beetroot juice
- Advertisement -

பெண்கள் அனைவருக்கும் மருதாணி வைத்துக் கொள்வது என்றால் கொள்ளை பிரியம் தான். ஆனால் அதற்கென மருதாணி இலை பறித்து அரைத்து அதை வைத்து அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதால் பெரும்பாலும் பழைய முறையை யாரும் கடைபிடிப்பதில்லை. அது மட்டும் இன்றி இப்போதெல்லாம் இன்ஸ்டன்ட் கோன் வகைகள் அதிகமாக வந்து விட்டது. இதை வைத்து பலவிதமான டிசைன்கள் போடலாம் என்பதால் மருதாணி இலையை பறித்து அரைத்து வைப்பதை விட இந்த முறையே அதிகமாக விரும்புகிறார்கள்.

இந்த வீட்டு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளும் மருதாணி முறையானது இயற்கையான முறையில் அதே நேரத்தில் சுலபமாகவும் செய்யக் கூடியது. இதை வைத்து நாம் கோனில் வைப்பது போல டிசைன்ஸ் அனைத்தையும் போட முடியும் வாங்க அந்த இன்ஸ்டன்ட் மருதாணியை தயாரிக்கும் முறை எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இன்ஸ்டன்ட் மருதாணி தயாரிக்கும் முறை: (Instant Mehandi liquid in Tamil)
இதை தயாரிக்க முதலில் சிறிய பௌலில் ஒரு டீஸ்பூன் டீத்தூளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் ஏதேனும் பழைய டப்பா அல்லது சமையலுக்கு பயன்படுத்தாத அடி கனமான பாத்திரம், மண் சட்டி போன்றவற்றை கூட எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பயன்படுத்திய இந்த பாத்திரத்தில் வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது.

இப்போது நீங்கள் எடுத்து வைத்த பாத்திரத்தின் உள்ளே நடுவில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து விட்டு அதை சுற்றிலும் கலந்து வைத்த டீ தூள் சர்க்கரை கலவை போட்டு விடுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து தயார் செய்து வைத்த இந்த பாத்திரத்தை அதில் வைத்து அதன் மேல் காற்று புகாத அளவுக்கு இன்னொரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இப்போது கீழே இருக்கும் பாத்திரம் சூடாக சூடாக ஆவி போல வரும் இரண்டு நிமிடம் இது அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்க வேண்டாம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு சிறிய துண்டு பீட்ரூட்டை எடுத்து தோல் சீவி துருவி கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் நீங்கள் துருவி வைத்த பீட்ரூட்டை கைகளாலே பிழிந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் இருக்கும் பாத்திரத்தின் சூடு முழுவதுமாக இறங்கிய பிறகு மேலே தண்ணீர் இருக்கும் பாத்திரத்தை எடுத்து விட்டு உள்ளே இருக்கும் கிண்ணத்தை பார்த்தால் அதில் கொஞ்சமாக நீங்கள் கலந்து வைத்து டீத்தூள் சர்க்கரை கரைந்து அதன் சாறு இறங்கி இருக்கும்.

இப்போது இந்த சாறையும் நீங்கள் கலந்து வைத்து பீட்ரூட் சாறையும் ஒன்றாக கலந்து அதில் ஒரு ஸ்பூன் மைதா மாவை கலந்து விடுங்கள்.இதை கலக்கும் போது போதவில்லை எனில் இன்னும் கொஞ்சம் கலந்த பிறகு இதை நீங்கள் கைகளில் மருதாணி போல வைத்துக் கொள்ளுங்கள். இது நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு இருப்பதால் பிளாஸ்டிக் கவரில் கூட போட்டு எந்த விதமான டிசைன்ஸ் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இது 20 நிமிடம் வரை உங்கள் கையில் இருந்தாலே போதும் நன்றாக காய்ந்து சிவப்பாக மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: விடாப்பிடியான எண்ணெய் பிசுக்குள்ள பித்தளை பாத்திரங்கள் பளபளக்க இது தெரிஞ்சா இனி கஷ்டப்படத் தேவையில்லை! கண் இமைக்கும் நொடியிலேயே சுத்தம் செய்து விடலாம் தெரியுமா?

இந்த இயற்கையான இன்ஸ்டன்ட் மருதாணி தயாரிக்கும் முறையில் பீட்ரூட்டிற்கு பதிலாக குங்குமத்தை சேர்த்தும் செய்யலாம். இது கொஞ்சம் வித்தியாசமான அது மட்டும் இல்லை முழுவதுமாக இயற்கையான பொருட்களை கொண்டு செய்வது. இப்போது பல இடங்களில் மருதாணி கிடைக்காது அல்லது விசேஷ நாட்கள் உடனே வைக்க வேண்டும் என்றால் இப்படி வீட்டிலே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இது பார்க்க மிகவும் அழகாக இருக்கும். டிரை பண்ணி பாருங்க.

- Advertisement -