ஃப்ரிட்ஜில் நீங்கள் எப்பொழுதும் வைத்திருக்கும் இந்த 1 பொருள் மட்டும் இருந்தால் உங்களுடைய தலைமுடி பிரச்சனை ஒரே வாரத்தில் தீர்ந்து விடுமே!

curd-thayir-hair
- Advertisement -

நம் எல்லோருடைய வீட்டிலும் பிரிட்ஜில் கண்டிப்பாக தயிர் வைத்திருப்போம். இந்த தயிரில் ஏராளமான புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் விட்டமின் பி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நம்முடைய தலைமுடியை அபரிமிதமாக வளர செய்கிறது. தயிரை எப்படி எல்லாம் பயன்படுத்தினால் நம்முடைய தலைமுடி பிரச்சனைகளை சுலபமாக நீக்கிக் கொள்ளலாம்? என்கிற அழகு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

தலைமுடிக்கு தேவையான புரோட்டின் கிடைக்க தயிருடன் சேர்த்து முட்டையின் வெள்ளை கருவை கலந்து நன்கு பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். பின்னர் இதை உங்களுடைய தலை முடியை பிரித்து எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பிறகு 30 நிமிடம் ஊறவிட்டு விட்டு சாதாரண தண்ணீரால் நீங்கள் வழக்கம் போல் போடும் ஷாம்புவை போட்டு அலசினால் ஒரே வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். வாரத்திற்கு இரண்டு முறை போடுங்கள். இந்த பேக் போடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -

பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள வாழைப்பழத்தில் பாதி அளவு மட்டும் எடுத்து அரை கப் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் இதை தலைமுடி முழுவதும் நன்கு தடவி உலர விட்டு விடுங்கள். இது உங்களுடைய தலைமுடி வறட்சியிலிருந்து மீட்டு ஈர பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும். இதனால் வேருடன் கொட்டும் முடி உதிர்வு பிரச்சினை ஒரே வாரத்தில் தீரும்.

ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் தேவையான அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை தலை முழுவதும் தடவி 20 நிமிடம் கழித்து நீங்கள் சாதாரணமாக தண்ணீரில் அலசி எடுத்தால் கூந்தல் பட்டு போல அலைபாயத் துவங்கும். மேலும் இதனால் முடி உதிர்வது நின்று வேகமாக வளரவும் துவங்கும்.

- Advertisement -

ரெண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தலை முழுவதும் தடவி உலர விட்டுவிட்டு கழுவி வந்தால் ஸ்கேல்பில் எண்ணெய் சுரப்பியை கட்டுப்படுத்தி தலைமுடியில் இருக்கும் பொடுகுகளை நீக்கி பாக்டீரியா தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும், இதனால் தலைமுடி அசுர வேகத்தில் வளரும்.

இதையும் படிக்கலாமே:
பால் குடிக்க மட்டும் இல்லாம ஹீரோயின் போல பேரழகா ஜொலிக்கவும் இப்படி எல்லாம் பயன்படுகிறதா? இவ்வளவு நாளா இத தெரிஞ்சுக்காம போயிட்டோமேன்னு வருத்தபடாதீங்க!

மூன்று ஸ்பூன் கற்றாழையுடன், 2 ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து நன்கு தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடம் நன்கு மசாஜ் செய்த பின்பு 30 நிமிடம் உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் தலையை எப்பொழுதும் போல அலசினால் தலைமுடி கொத்துக்கொத்தாக உதிர்வது உடனடியாக நிற்கும். முந்தைய நாள் ஊற வைத்த வெந்தயத்துடன் தேவையான அளவுக்கு தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல அரைத்து தலை முழுவதும் பேக் போட்டு வைத்தால் உடல் உஷ்ணம் தணியும் மேலும் இதனால் தலைமுடி வறண்டு போவது தடுக்கப்பட்டு, ஈரப்பதத்துடன் நன்கு வளர துவங்கும். மேற்கூறிய எல்லா பேக்குகளையும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் தாராளமாக நீங்கள் போடலாம் செம ரிசல்ட்டு கிடைக்கும்.

- Advertisement -