உங்க வீட்டில தயிர் இருக்கா? அப்படின்னா, இட்லி தோசை சப்பாத்திக்கு இந்த சைட்டிஷ் செஞ்சு, ஃபிரிட்ஜில் வச்சிட்டா 4 நாளைக்கு பிரச்சனை இல்லை.

onion-gravy

தினமும் வேலைக்கு போகும் பெண்களுக்கு இந்த சைடிஷ் குறிப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும். தினமும் காலையில, பிரேக்பாஸ்டுக்கு தொட்டுக்க என்ன செய்யறதுன்னு இனி பிரச்சனையே இல்லைங்க! இந்த கிரேவியை செஞ்சு, ப்ரிட்ஜுல வச்சுட்டா, 4 நாளைக்கு கெட்டுப்போகாது. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, இவைகளுக்கு சூப்பர் சைடிஷ், சுலபமாக எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். வேலைக்கு போற பெண்கள் மட்டும் தான் இதை செய்யணுமா? அப்படின்னு கேக்காதீங்க! எல்லோருமே செஞ்சு பாருங்க! வித்தியாசமான ஒரு சைட் டிஷ், வித்தியாசமான சுவையில் இருக்கும்.

gravy

Step 1:
முதலில் புளிக்காத கெட்டித் தயிரை 1/4 கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். உருண்டைகள் இல்லாமல், அந்த தயிரை நன்றாக, அடித்து கலக்கி, வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தயிரோடு, மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் – 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், உப்பு – 1/4 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலக்கி ஓரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

Step 2:
அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து விட்டு, நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கொத்து, சேர்த்து பொரிய விடவேண்டும். அடுத்ததாக, பூண்டுப் பல் – 6 பொடியாக நறுக்கியது, சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். அடுத்ததாக பெரிய வெங்காயம் 1 – பொடியாக நறுக்கியது சேர்த்து சிவப்பு நிறம் வரும் அளவிற்கு வதக்கவேண்டும். வெங்காயம் எவ்வளவு வதங்குகிறதோ, அந்த அளவிற்கு உங்களது கிரேவி சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

curd

Step 3:
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு, முதலில் தயார் செய்து வைத்திருக்கும் தயிர் கரைசலை வெங்காயத்தோடு சேர்த்து, கிளறி நன்றாக கொதிக்கவிட வேண்டும். இந்த இடத்தில் தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். தயிரும் வெங்காயமும் ஒன்றாக சேர்ந்து, வெந்து ஒரு கிரேவி பதத்திற்கு வரவேண்டும். இந்த கிரேவியில் இருந்து நாம் ஊற்றிய எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை குதித்தால் போதும். தயிரை ஊற்றிய பின்பு கிரேவி தயாராக மொத்தமாக நான்கிலிருந்து ஐந்து நிமிடங்களே எடுக்கும். அவ்வளவுதான், கிரேவி ரெடி.

- Advertisement -

இந்த கிரேவியை நன்றாக ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான இந்த கிரேவியின், சுவை மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்!

முக்கிய குறிப்பு கிரேவியில் எண்ணெய் நன்றாக மிதக்கும் அளவிற்கு இருக்கவேண்டும். எண்ணெய் குறைவாக இருந்தால், அடுத்த நாள் எடுத்து வைக்கும் பட்சத்தில் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் நிறைய பேர் இருந்தால், தயிரின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை கொஞ்சம் போல் சேர்த்து, 2 வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டுக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.