இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிட்டு, நம் தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் நீங்கி, முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

tea hair pack long hair
- Advertisement -

அந்த காலத்தில் நரைமுடி ஒன்று என்று வந்துவிட்டாலே தங்களுக்கு வயதாகி விட்டது என்று நினைப்பார்கள். 60 வயதை தாண்டினால் தான் அவர்களுக்கு நரை என்பதே வரும். காரணம் அவர்கள் எடுத்துக்கொண்ட சத்து மிகுந்த உணவுப் பொருட்களே ஆகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. மேலும் முடி உதிர்தல் பிரச்சனையும் அதிகரித்து விடுகிறது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு நாம் ஒரு பொருளை உபயோகப்படுத்தப் போகிறோம். அந்த பொருளை நாம் சாப்பிடவும் வேண்டும். அதே சமயம் நம் தலைக்கு தடவும் வேண்டும். அப்படி தடவினால் இளநரை மாறுவதோடு முடி உதிர்தல் பிரச்சனையும் தீர்ந்து முடி கருமையுடனும், அடர்த்தியாகவும் வளரும். அப்படிப்பட்ட பொருள் என்ன என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த ஒரு பொருளையும் நாம் இலவசமாக வாங்கினோம் என்றால், அதன் மதிப்பும் அருமையும் நமக்கு தெரியாது. அதை நாம் அலட்சியமே செய்வோம். இது அனைத்து விதமான பொருட்களுக்கும் பொருந்தும். அதிலும் மிகவும் முக்கியமாக நாம் காய்கறி வாங்கும் பொழுது நமக்கு ஓசியாக தரக்கூடிய கருவேப்பிலை.

- Advertisement -

கருவேப்பிலையில் பல அற்புதமான உயரிய சத்துக்கள் இருக்கின்றன. இவை நாம் தினமும் உட்கொண்டால் நம் முடி அடர்த்தியாக வளரும். மேலும் கருமையுடனும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆதலால் தான் இந்த கருவேப்பிலையை நம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த கருவேப்பிலையை நாம் சாப்பிடுவதால் கண் சம்பந்தப்பட்ட நோய்களும் தீர்க்கப்படுகிறது.

கருவேப்பிலை டீ தயாரிக்கும் முறை:
ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்து நன்றாக உரலில் வைத்து தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 11/2 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். தண்ணீர் சிறிது கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது நாம் தட்டி வைத்திருக்கும் கருவேப்பிலையை அதில் சேர்க்க வேண்டும். அதில் கால் ஸ்பூன் சீரகம் மற்றும் கால் ஸ்பூன் மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீர் ஒரு கப் அளவிற்கு வரும் அளவிற்கு கொதிக்க விட்டு பிறகு அதை வடிகட்டி பருக வேண்டும்.

- Advertisement -

கருவேப்பிலை ஹேர் பேக்:
கால் கப் சுத்தமான கருவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். தேங்காய் பால் தயார் செய்ய இயலாதவர்கள் சுத்தமான தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம். முடிந்த அளவு தேங்காய் பால் சேர்ப்பதற்கே முதலிடம் கொடுங்கள். பிறகு இதனுடன் அரை எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தலையின் வேர்க்கால்களில் நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க முடி ஆலமர விழுது போல நல்லா ஸ்ட்ராங்கா உதிராமல் நீளமா வளர இதோ சூப்பரான ரெமிடியை ட்ரை பண்ணுங்க. இனி முடி உதிர்வு பிரச்சனை உங்க வாழ்நாளிலேயே வராது.

இவ்வாறு தினமும் கருவேப்பிலை டீயை குடித்து, வாரத்திற்கு ஒருமுறை இந்த ஹேர் பேக்கை உபயோகப்படுத்துவதன் மூலம் பொடுகு தொந்தரவு நீங்கும். முடி வேர்கால்கள் வலுப்பெறும். மேலும் முடிவு உதிர்தல் முற்றிலுமாக நின்று கருமையுடன் வளரும்.

- Advertisement -