இந்த எண்ணெயை தலையில் தேய்க்க தேய்க்க கட்டுக்கடங்காமல் காடு போல உங்களுடைய முடி வளர தொடங்கி விடும். முடியை கட்டி வைக்க பிறகு ரப்பர் பேண்ட் கூட பத்தாது.

hair8
- Advertisement -

முடி அதிகமாக உதிர்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலும் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி மன குழப்பம், மன அழுத்தம் காரணத்தினால் அதிக முடி கொட்டுகிறது. அது மட்டுமல்லாமல் நாம் உண்ணும் உணவில் இருந்து, தலைக்கு போடும் ஷாம்பு வரை எல்லாமே கெமிக்கல். இப்படி கெமிக்கல் கலந்த பொருட்களை பயன் படுத்துவதால், அந்த காலத்தை ஒப்பிடும்போது, இந்த காலத்தில் வாழும் பெண்களுக்கு முடி வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கிறது. அதில் ஒரு சில பேர் மட்டும் விதிவிலக்கு. அவர்களுக்கு மட்டும் எப்படி முடி வளர்கிறது. எனக்கு வளரவில்லையே, என்று முதலில் கவலை படாதீங்க. கவலை பட்டாலே முடி கொட்டும். கவலைப்படாமல் இந்த அழகு குறிப்பு பின்பற்றி பாருங்கள். 15 நாட்களில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய ரிசல்ட் கிடைக்கும்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு எண்ணெய்:
இந்த குறிப்புக்கு நான் பயன்படுத்த போகும் பொருள் சுத்தமான மரசெக்கு தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை 1 கைப்பிடி அளவு, வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் 1. அதுவும் கெமிக்கல் தானே என்று கேட்காதீங்க. அது உங்களுடைய முடி வளர்ச்சியை நன்றாக தூண்டி விடக் கூடிய வேலையை செய்யும். கெமிக்கல் கலந்த பொருட்களை சாப்பிட்டு நம்முடைய உடலிலும் ஊட்டச்சத்து குறைவாக தானே இருக்கிறது. அதை பேலன்ஸ் செய்ய இந்த ஒரு கேப்சூல் தேவை தான்.

- Advertisement -

ஃபிரஷான கருவேப்பிலைகளை எடுத்து கையிலையே இடித்துக் கொள்ள வேண்டும். சிறிய உடலில் போட்டு நசுக்கினால் கருவேப்பிலை விழுதாக நமக்கு கிடைக்கும். அடுப்பில் ஒரு பவுலை வைத்து அதில் 100ml அளவு சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயை ஊற்றி இடித்து வைத்திருக்கும் கருவேப்பிலைகளை போட்டு எண்ணெயை கொதிக்க வையுங்கள். எண்ணெய் பச்சை நிறத்திற்கு வந்த உடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

பிறகு இந்த எண்ணெய் நன்றாக ஆறிய பின்பு வடி கட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டிய எண்ணெயில், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல்லை பிழிந்து விட்டு, நன்றாக கலந்து இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். விடாமல் 15 நாட்கள் இந்த எண்ணெயை உங்களுடைய தலையில் வைத்து விர வேண்டும்.

- Advertisement -

முடியை ஒவ்வொரு பாகங்களாக பிரித்து மயிர்க்கால்களில் படும்படி எண்ணெயை மசாஜ் செய்யுங்கள். தலைக்கு குளிக்க வேண்டாம். தினமும் இந்த எண்ணெயை தலையில் வைத்து அப்படியே விட்டு விடலாம். 15 நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே வழுக்கையான இடங்களில் எல்லாம் முடி வளர்வதை உங்களால் பார்க்க முடியும். (வாரத்தில் இரண்டு நாள் எப்போதும் போல தலைக்கு குளித்துவிட்டு அடுத்த நாள் இந்த தேங்காய் எண்ணெயை வைத்துக் கொள்ளுங்கள்.)

இதையும் படிக்கலாமே: திடீரென நண்பர்களை சந்திக்கணுமா? 10 நிமிடத்தில் உங்க முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்க இத பண்ணிட்டு அப்புறமா போங்க!

உங்களுடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை. நீங்கள் ரொம்பவும் பலவீனமாக இருப்பவர்கள் என்றால், இதோடு சேர்த்து டயடிலும் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். கருவேப்பிலை பொடி, நெல்லிக்காய், ஆரஞ்சு பழம், பேரிச்சம்பழம், வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை, போன்ற பொருட்களையும் தினசரி உணவோடு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை காய்கறிகள் கீரைகளை உணவோடு அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீரை பருகி வாருங்கள். இதை சீராக செய்தாலே உங்களுடைய முடி கட்டுக்கடங்காமல் நிச்சயம் வளர தொடங்கும்.

- Advertisement -