திடீரென நண்பர்களை சந்திக்கணுமா? 10 நிமிடத்தில் உங்க முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்க இத பண்ணிட்டு அப்புறமா போங்க!

beetroot-gelatin-face-pack
- Advertisement -

இன்ஸ்டன்ட் ஆக உடனே நம்முடைய முகம் பட்டு போல மின்னுவது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான் ஆனால் திடீரென யாரையாவது சந்திக்க வேண்டும் அல்லது எங்காவது செல்ல வேண்டும் என்று இருந்தால் அந்த சமயத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்? இன்ஸ்டன்ட் ஆக பளபளன்னு நம்முடைய முகத்தை ஹீரோயின் போல ஜொலிக்க செய்வது இந்த முறையில் ரொம்பவே ஈசி! இதை வீட்டிலேயே அதிக செலவில்லாமல் எப்படி நாமே செய்து கொள்ளலாம்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.

நம்முடைய முகம் எல்லா நேரத்திலும் பிரஷ்ஷாக இருக்கும் என்று கூறி விட முடியாது. அடிக்கடி நம்முடைய முகத்தை சுத்தம் செய்து கொண்டும் இருக்க முடியாது. குளிக்கும் பொழுது மட்டும் சோப்பு போட்டு குளிப்போம் அவ்வளவுதான் என்று இருப்பவர்களுடைய முகம் திடீரென எங்காவது கிளம்பும் பொழுது அதற்கு ஏற்ப தயாராக இருக்காது. இந்த சமயங்களில் நம்முடைய சருமத்தை பாதிக்காமல் ரொம்ப சூப்பரான முறையில் ஃபேசியல் செய்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதற்கு என்ன செய்யப் போகிறோம்?

- Advertisement -

இதற்கு முதலில் பீட்ரூட் பவுடர் வேண்டும். இதற்கு நீங்கள் பீட்ரூட்டை நன்கு காய வைத்து பவுடர் ஆக்கி வைத்துக் கொள்ளலாம் அல்லது கடைகளிலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதே போல ஜெலட்டின் பவுடர் தேவை. ஜெலட்டின் பவுடர் என்பது ஒரு வகையான விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் கொலாஜன் ஆகும்.

இது சில வகையான விலங்குகளின் தோல், குறுத்தெழும்பு, எலும்புகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது சருமத்தை நன்கு இருக செய்துவிடும். மேலும் ரொம்பவே சுலபமாக கருந்திட்டுகளை அகற்றக் கூடிய அற்புதமான ஒரு பொருளாகவும் இருக்கிறது. ஜெலட்டின் பவுடர் சருமத்தை மட்டுமல்லாமல் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ரொம்பவே உதவி செய்யக்கூடிய ஒரு ஆற்றல் மிகுந்த பொருளாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த ஜெலட்டின் பெரும்பாலும் கேக், ஜெல்லி, ஐஸ்கிரீம் போன்றவற்றை செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஹெல்த் ஸ்டோர் மற்றும் ஆன்லைனில் கிடைக்க பெறும். இப்போது ஒரு சிறிய அளவிலான பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பீட்ரூட் பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஜெலட்டின் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் சூடான தண்ணீர் அல்லது சூடான பால் ஏதேனும் ஒன்றை சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கண்கள் மற்றும் உதடுகளை தவிர எல்லா இடங்களிலும் ஒரே சமமாக தடவி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்கு காய்ந்ததும் அது பீல் போல அப்படியே உறிந்து வந்துவிடும். அதுவரை பொறுமையாக உலர விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் பாதங்களும் சினிமா நடிகைகளின் பாதங்கள் போலவே நாள் முழுவதும் அழகாக இருக்க, நகங்களில் சொத்தைகள் விழாமல் இருக்க, இந்த தண்ணீரில் தினமும் பாதங்களை கழுவினாலே போதும்.

பிறகு அதை நீங்கள் ஒரு கவர் போல பிரித்து எடுத்து விடலாம். இதனால் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், மாசு தூசுகள், கருந்திட்டுக்கள் அனைத்தும் இதனுடன் ஒட்டிக் கொண்டு வந்துவிடும். உங்களுடைய முகம் பத்தே நிமிடத்தில் பளிச்சென ஹீரோயின் போல ஜொலிக்கும். அவசரத்திற்கு மட்டுமல்ல, நம்முடைய அழகிற்கும் இதை தாராளமாக பயன்படுத்தலாமே!

- Advertisement -