கருவேப்பிலைப் பொடியை ஒரு முறை இப்படி அரைத்துப் பாருங்கள்! கமகம வாசத்துடன் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.

curryleaves-podi
- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களில் இந்த கருவேப்பிலையும் ஒன்று. குறிப்பாக உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை அதிகமாக கொடுத்து, முடியை வளர வைக்க கூடிய சத்து இதில் உள்ளது, நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். சமையலில் வாசத்தை அதிகமாக கொடுக்கும் இந்த கருவேப்பிலை உடலுக்கு ஊட்டச்சத்தையும் நிறையவே கொடுக்கின்றது. ஆனால் இதை நாம் உணவோடு சேர்த்து சாப்பிடுவதே கிடையாது. எடுத்து ஓரமாக ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் கறிவேப்பிலையை பொடியாக அரைத்து சாப்பிட்டால் இதனுடைய சுவையும் மணமும் சூப்பராக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கருவேப்பிலை பொடி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

curryleaves-podi1

நான்கு கைப்பிடி அளவு பச்சை கறிவேப்பிலையை நன்றாக தண்ணீரில் போட்டு கழுவி, தண்ணீரை வடிய வைத்து தண்ணீர் இல்லாமல் ஆறவைத்துக் கொள்ளவேண்டும். இது அப்படியே இருக்கட்டும். (பச்சை கருவேப்பிலையில் இந்த பொடியை அரைக்கும்போது சுவையாக இருக்கும். சிலர் காயவைத்த கருவேப்பிலையில் இந்தப் பொடியை அரைப்பார்கள். அதில் கொஞ்சம் கசப்பு தன்மை வரும்).

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றிக்கொள்ள வேண்டும். அந்த எண்ணெய் காய்ந்ததும், உளுந்து – 4 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வர மிளகாய் – 10, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

curryleaves-podi2

இந்த பொருட்கள் அனைத்தும் வறுபட்டதும் கழுவி வைத்திருக்கும் கருவேப்பிலையை கடாயில் சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் வறுத்து கொள்ள வேண்டும். கருவேப்பிலை பச்சை நிறத்தில் தான் இருக்க வேண்டும். அதேசமயம் கருவேப்பிலை வரப்பட்டும் இருக்க வேணும். எல்லாப் பொருட்களும் சரியான அளவு வறு பட்டவுடன் இதை தனியாக ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வறுத்து வைத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு, 2 சிட்டிகை பெருங்காயம், 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அதாவது 90 சதவிகிதம் மைய அரைத்து எடுத்தால் போதும். இதை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால் 15 நாட்களுக்கு நன்றாக இருக்கும். (எண்ணெய் ஊற்றாமல் எல்லா பொருட்களையும் வறுத்து அரைத்தால் 2 லிருந்து 3 மாதங்கள் வரைகூட கெட்டுப் போகாமல் இருக்கும்.)

curryleaves-podi3

இந்த கருவேப்பிலை பொடியை இட்லி பொடி போல, இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.  தோசை மேல் தூவியும், பொடி தோசை போல் சாப்பிடலாம். சுடச்சுட சாதத்தில் இந்த கருவேப்பிலை பொடியை போட்டு ஒரு சொட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் ஆஹா அருமையான சுவையில் இருக்கும். ஒரே ஒரு முறை உங்களுடைய வீட்டில் கருவேப்பிலையை இப்படி அரைத்து பொடியாக கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

- Advertisement -