வீட்டில் பூச்செடி அல்லது தோட்டம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உரம் என்ன? கொத்துக்கொத்தாக பூக்களையும், காய்களையும் அள்ள இந்த ஒரு உரம் மட்டுமே போதும் தெரியுமா?

dap-fertilizer-rose
- Advertisement -

விவசாயத்திற்கு மிக முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் இந்த ஒரு உரம் ரொம்பவே சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிக மகசூலை பெறுவதற்கு கண்டிப்பாக இந்த ஒரு உரத்தை எல்லா விவசாயிகளும் பயன்படுத்துவது வழக்கம். அப்படியான இந்த ஒரு உரம் நம் வீட்டு தோட்டத்திற்கு எந்த அளவிற்கு பயன்படும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செடியாக இருந்தாலும், மரமாக இருந்தாலும் எல்லா வகையான தாவரத்திற்கும் நல்ல ஒரு வளர்ச்சி ஊக்கியாக செயல்படக்கூடிய இந்த உரம் அனைத்து நர்சரி மற்றும் உரக் கடைகளிலும் கிடைக்கப் பெறுகிறது. ஒரு கிலோ 30 ரூபாயிலிருந்து கிடைக்கும் இந்த உரத்தை ஒருமுறை நீங்கள் வாங்கி வைத்துக் கொண்டால் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா வகையான பூச்செடி, காய்கறி செடி மற்றும் பழ செடிகளுக்கு நல்ல ஒரு உரமாக இருக்கும். மிக சிறிதளவு இந்த உரத்தை பயன்படுத்தி வந்தாலே அதிகமான மகசூலை அடையலாம்.

- Advertisement -

நாம் என்னதான் இயற்கை உரத்தை கொடுத்து பார்த்து பார்த்து வளர்த்தாலும் கிடைக்காத இந்த வளர்ச்சியை கொடுக்கக் கூடிய சக்தி ‘டைமோனியம் பாஸ்பேட்’ என்கிற இந்த டிஏபி உரத்திற்கு அதிகம் உண்டு. கொத்து கொத்தாக மொட்டுக்களை வளர செய்யக்கூடிய இந்த டிஏபி உரத்தை 10 கிராம் அளவிற்கு மாதம் இருமுறை கொடுத்தால் போதும், உங்களுடைய பூச்செடிகள் அனைத்திலும் நல்ல ஒரு வளர்ச்சியை நீங்கள் காணலாம்.

ரோஜா, மல்லி செடி வைத்திருப்பவர்கள் 10 கிராம் டிஏபி உரத்தை மாதம் இருமுறை செடியின் வேர்கால்களுக்கு கொடுத்து வந்தால் ஒரு கிளையில் 10, 20 மொட்டுக்கள் கூட பூத்து தள்ளும். அந்த அளவிற்கு சிறந்த மகசூலை கொடுக்கக் கூடிய இந்த டிஏபி உரம் இரண்டு விதமான சத்துக்களை கொண்டுள்ளது. இந்த சத்து எல்லா வகையான தாவரத்திற்கும் இன்றி அமையாததாக விளங்குகிறது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோஜா செடி வைத்திருப்பவர்கள் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை அதன் வேர்களுக்கு நெருக்கமாக அல்லாமல் சற்று தள்ளி மண் பகுதியை நன்கு கைகளால் கிளறி கொள்ளுங்கள். பிறகு இந்த உரத்தை 10 கிராம் அளவிற்கு மண்ணை சுற்றிலும் தூவி விடுங்கள். பின்னர் எப்போதும் போல நீர் பாய்ச்சி வாருங்கள். இது போல செய்வதால் ரோஜா செடியில் ஒரு கிளையில் அதிக மொட்டுக்கள் பூக்க ஆரம்பிக்கும். மேலும் துளிர்காத செடியில் கூட துளிர் விடக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

நீங்கள் இயற்கை உரங்களை அவ்வபோது கொடுத்து வந்தாலும், இந்த டிஏபி உரத்தை மாதம் ஒருமுறை அல்லது இருமுறை உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா வகையான செடிகளுக்கும் குறைந்த அளவில் பயன்படுத்தி பாருங்கள். அதன் பிறகு ஏற்படக்கூடிய மாற்றத்தை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். காய்கறிகளையும், கனி வகைகளையும் கூட கொத்துக்கொத்தாக கொடுக்கக்கூடிய அபரிமிதமான வளர்ச்சியை அள்ளி தரும் இந்த டிஏபி விவசாயிக்கு கிடைத்த ஒரு பெரும் கொடையாகும்.

- Advertisement -