இந்த 2 பொருட்கள் உங்களிடம் இருந்தால் போதும் வேண்டிய வேண்டுதல் உடனே நடக்கும்.

prayingman-murugan

எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற எல்லாருக்கும் ஆசை தான். ஆனால் நடப்பது என்னவோ நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது போல் உள்ளது. நன்றாக இருக்கும் போது கடவுளை திரும்பிக்கூட சிலர் பார்ப்பதில்லை. கஷ்டம் என்று வரும் போது மட்டும் தன்னை அறியாமல் தாயிடம் ஓடி செல்லும் குழந்தை போல் கடவுளே உனக்கு கண் இல்லையா? எனக்கு ஏன் இவ்வளவு சோதனைகளை தருகிறாய்? என்று மன்றாடுகிறோம்.

crying-to-god

அந்த இறைவன் சோதனைகளை கொடுப்பதே நீங்கள் தர்மத்தின் பக்கம் நிற்கிறீர்களா? என்று அறிந்து கொள்ள தான். துன்பம் நேரும் போது அதர்மம் செய்யவும் துணிவு வந்து விடும். எது சரி? எது தவறு? என்று பார்க்கும் பக்குவம் நீங்கி விடும். என்ன செய்தாவது நாம் நினைத்ததை சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். இங்கு தான் பெரும்பாலும் மனிதன் தோற்று போகின்றான். கடினமான மேல் தோலை நீக்கினால் தானே உள்ளே இருக்கும் பலாசுலைகளை ருசிக்க முடியும்? அதே போல் தான் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டு தர்மத்தின் பக்கம் நின்றால் தான் மகிழ்ச்சி என்னும் சுவையை நிரந்தரமாக அனுபவிக்க முடியும். இதில் மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை. இறைவனை நினைந்து மனதார வேண்டினால் போதும். அவர் நிச்சயம் கை கொடுப்பார். இறை சக்தியை ஈர்க்க கும்பாபிஷேகங்கள் ஆலயங்களில் நடைபெறுகின்றன. அது போல் வீட்டில் நாம் என்ன செய்யலாம் என்று இப்பதிவில் காண்போம்.

இறை சக்தியை ஈர்க்கும் ஆற்றல் ஒரு சில பொருட்களுக்கு உண்டு. அதில் ஒன்று தான் தர்பை. தர்பை புல் என்பது எண்ணற்ற அபூர்வ சக்திகள் தன்னகத்தே கொண்ட அற்புத மூலிகை என்று கூறலாம். அதனால் தான் கும்பாபிஷேகத்தில் கலசம் உள்ளே நிரப்பும் முக்கிய பொருட்களில் ஒன்றாக தர்ப்பை விளங்குகிறது. மேலும் முக்கிய சடங்கு சம்பிரதாயங்கள் இந்த புனித தர்பை இல்லாமல் நடைபெறுவதில்லை.

dharpai-grass

அத்தகைய சக்தி வாய்ந்த தர்பை புல் ஒன்றை முழுமையாக எடுத்து கொள்ளவும். சாதாரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தாயத்து ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். நிறைந்த பௌர்ணமி தினத்தில் மாலை பூஜை வேளையில் பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு இந்த தர்பை புல்லை சிறிய அளவில் மடித்து கொண்டே வர வேண்டும். சரியான முறையில் சீராக மடித்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த தாயத்தினுள் தர்பைபுல்லை நுழைத்து விட வேண்டும். அதனுடன் சுத்தமான விபூதி சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக இருக்கமாக மூடி விட வேண்டும்.

- Advertisement -

இந்த தாயத்தை கைகளில், கழுத்தில் அணிந்து கொண்டால் இறை சக்தி ஈர்க்கப்பட்டு உங்களுடைய உண்மையான வேண்டுதல் பிரபஞ்சத்தின்பால் கொண்டு சேர்க்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நினைத்த காரியங்கள் கை கூடும்.

thayathu

ஆனால் ஒரு சிக்கல் உள்ளது. உங்களுடைய வேண்டுதல் நன்மைக்காக இல்லாமல் இருந்தால் அதன் தாக்கம் உங்களையே பின் தொடரும். தீவினை சூழும். எனவே எண்ணங்கள் நல்லனவாக இருக்க வேண்டும்.

நன்மைக்காக வேண்டிய வேண்டுதல் கட்டாயம் இதன் மூலம் நிறைவேறும்.
சுத்த விபூதியில் ஈச சக்தி அடங்கியுள்ளது. விபூதி தர்பையுடன் சேர்ந்து நமக்கு இறை ஆற்றலை பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.

இதையும் படிக்கலாமே
குலதெய்வத்தின் கோபத்தைத் தணிக்க இந்த தினத்தில் வழிபாடு செய்யுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kadavulai vasiyam seivathu eppadi. Darbha grass uses in Tamil. Tharpai pul benefits in Tamil. Dharbai pavithram. Tharpaipul vasiyam Tamil.