அமாவாசைக்கு மறுநாள் செய்ய வேண்டியது

vilaku-panam
- Advertisement -

அமாவாசை என்றாலே அது முன்னோர்களுக்கான வழிபாடு செய்யும் நாள் தான். அன்றைய தினத்தில் முன்னோர்களுக்காக வீட்டில் படையல் இட்டு வணங்குவோம். அதே நேரத்தில் ஆலயத்தில் தர்ப்பணம் கொடுப்பது காக்கைக்கு சாதம் வைப்பது அன்னதானம் செய்வது போன்றவற்றையெல்லாம் பலரும் தவறாமல் கடைப்பிடிப்போம்.

இவையெல்லாம் செய்வதுடன் சேர்த்து இன்னொரு காரியத்தையும் நாம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இதை அமாவாசைக்கு அடுத்த தினம் செய்ய வேண்டும். அந்த ஒரு செயலை நாம் செய்யாது போனால் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்களும் வீண்விரயங்களும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

பண வீண் விரயத்தை தடுக்க

அமாவாசை வழிபாடுக்கு என்னென்ன வழிமுறைகள் என்று அனைவருக்கும் தெரியும். அமாவாசை வழிபாடு முடிந்த பிறகு செய்ய வேண்டிய ஒரு முறை இருக்கிறது. அதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதை அமாவாசைக்கு முன்னோர்களுக்கு படையல் இட்டு செய்பவர்கள் மட்டும் செய்தால் போதும் மற்றவர்கள் செய்ய வேண்டாம்.

ஏனென்றால் அமாவாசை வழிபாட்டை அனைவருக்கும் கிடையாது. வீட்டில் அமாவாசை தர்ப்பணம் கொடுக்காதவர்கள் படையல் போடாதவர்கள் இதை செய்ய வேண்டாம் இன்னும் சிலருக்கு அமாவாசை பழக்கமே இல்லை என்றும் சொல்வார்கள். அப்படியானவர்களுக்கு இது தேவையில்லை.

- Advertisement -

நாம் செய்ய வேண்டிய காரியம் அமாவாசை வழிபாடு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையில் வீட்டை முழுவதுமாக துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அதே போல பூஜை அறையில் விளக்கு ஏற்றி முன்னோர்களை வழிபாடு செய்திருந்தால் அந்த விளக்குகளையும் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் இருக்கும் படங்களையும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

சிலர் பூஜை அறையில் படங்களை வைக்காமல் தனியாக வைத்து தான் அமாவாசை வழிபாடு செய்வார்கள். அப்படி ஆனவர்கள் அந்த இடத்தில் பயன்படுத்திய விளக்கு போன்றவற்றை சுத்தம் செய்து விட வேண்டும். இதை செய்த பிறகு தான் நாம் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் அமாவாசை வழிபாடு என்பது முழுக்க முழுக்க முன்னோர்களுக்கானது. அடுத்த நாள் நாம் வீட்டில் ஏற்றும் தீபமானது தெய்வத்திற்கு ஏற்றப் போவது. என்ன தான் நம்முடைய குலத்திற்கு முன்னோர்கள் முக்கியமானவர்கள் என்றாலும் இறைவனோடு அவர்களை எப்போதும் நாம் ஒன்றாக வைத்து வணங்க கூடாது.

அதே போல் ஒன்றாக எந்த காரியத்தையும் செய்யக் கூடாது. அதற்காக தான் இந்த சுத்தம் செய்யும் முறை. இதை இன்றளவும் பல இடங்களில் கடைப்பிடித்து தான் வருகிறார்கள். இதை செய்யாது போனால் நமக்கு வீண் விரயங்கள் தேவையில்லாத மனக்குழப்பங்கள் சஞ்சலங்கள் போன்றவற்றை சந்திக்க நேரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சினை தீர வாராஹி வழிபாடு

ஆகையால் அமாவாசை வழிபாடு நல்ல முறையில் செய்து முடித்தவர்கள் அடுத்த நாள் இந்த ஒரு காரியத்தை செய்து விடுங்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு இது கொஞ்சம் சிரமம் தான் நம்முடைய நலனுக்காக செய்வது அவசியம் என்ற இந்த கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -