தீராத பிரச்சினை தீர வாராஹி வழிபாடு

varahi deepam
- Advertisement -

தன்னை விரும்பி வேண்டி வரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் வாரி வழங்கக் கூடிய சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடியவர் தான் வாராகி தாயார். இந்த வாராகி தாயாரை நினைத்து நாம் எந்த வேண்டுதலை வைத்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறிவிடும் என்று கூறப்படுகிறது. அப்படி நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களின் முழு மனதோடு வாராகி தாயாரை நினைத்து எந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வாராகி தாயாருக்கு மிகவும் உகந்த தினமாக பஞ்சமி தினம் திகழ்கிறது. இது வளர்பிறை பஞ்சமி அல்லது தேய்பிறை பஞ்சமி என்று எந்த பஞ்சமியாகவும் இருக்கலாம். இந்த வழிபாட்டை பஞ்சமி நாளன்று தொடங்குவது மிகவும் சிறப்பு குரியதாக இருக்கும். பஞ்சமி நாள் இல்லாத பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமையில் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கலாம். ஞாயிற்றுக்கிழமையும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமையில் செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அசைவம் சமைப்பதையோ சாப்பிடுவதையோ தவிர்ப்பது நல்லது. இந்த வழிபாட்டை மாலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். இதற்காக நமக்கு ஒரு புதிதாக வாங்கிய அகல் விளக்கு ஒன்று தேவைப்படும். முதலில் ஒரு சுத்தமான வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலையில் வாராகி அம்மனை நினைத்து மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அந்த வெற்றிலைக்கு பக்கத்தில் ஒரு சிறிய தாம்பாலத்தை வைத்து அந்த தாம்பாளத்தின் மேல் ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். அந்த அகல் விளக்கில் நல்லெண்ணையை ஊற்றி இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக இணைத்து போட வேண்டும். பிறகு அந்த நல்லெண்ணெயில் அரை ஸ்பூன் அளவிற்கு தேன், 3 கிராம்பு, 3 சிட்டிகை மஞ்சள் தூள் இவற்றை போட்ட பிறகு தான் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி நாம் தீபம் ஏற்றும் பொழுது வாராகி தாயாருக்கு மாதுளம் பழத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த தீபத்தை மாலை 5:45 முதல் 6:15க்குள் ஏற்ற வேண்டும். முதல் நாள் எந்த நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றி வழிபடுகிறோமோ அதே போல் தான் தொடர்ந்து 12 நாட்களும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நாம் மஞ்சளில் பிடித்து வைத்த பிள்ளையாரை எடுத்து வைத்துவிட்டு புதிதாக பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பழைய பிள்ளையாரை குளிக்கும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் கால் படாத இடத்தில் தண்ணீரில் கரைத்து ஊற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இலை அர்ச்சனை பலன்கள்

இந்த முறையில் வாராகி தாயாரை நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வருபவர்களுடைய தீர்க்க முடியாத பிரச்சினையும் தீர்ந்துவிடும்

- Advertisement -