உங்க கூடப் பிறந்தவங்களுக்கு இத மட்டும் செஞ்சு பாருங்க! உங்க வாழ்க்கையில் சந்தோஷம் மேலும் அதிகரிக்கும்.

raksha-food-vasthiram
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பாதி பகுதி தனக்காகவும், மீதி பகுதி மற்றவர்களுக்காகவும் வாழ்வது தர்மம் ஆகும். அப்படித்தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்றவர்களுக்காக வாழும் பொழுது நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். இதைத்தான் நம் முன்னோர்கள் ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்’ என்று கூறி வைத்தார்கள். ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்கிறோமோ இல்லையோ உடன் பிறந்தவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து வந்தாலே நாம் நன்றாக இருப்போம். அப்படி நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தான, தர்மங்களை செய்யும் பலரும் தன் சொந்த குடும்பத்திற்கு எதுவுமே செய்ய மாட்டார்கள். பிறகு எப்படி புண்ணியம் வந்து சேரும்? ‘தனக்கு போகத் தான் தானமும், தர்மமும்’ என்பது பழமொழி. அது தனக்காக செய்து கொள்வது மட்டுமல்ல, தன் குடும்பத்திற்காக செய்வதும் கூட பொருந்தும். குடும்பத்திற்கு செய்யும் தான, தர்மங்களை விட உயர்ந்த தர்மம் நீங்கள் மற்றவர்களுக்கு செய்யும் பொழுது கிடைப்பதில்லை.

- Advertisement -

மாதா, பிதா, குரு, தெய்வம், சகோதர, சகோதரிகள் இவர்களைத் தாண்டி தான் மற்றவர்களுக்கு தான தர்மங்களை செய்ய வேண்டும். இந்த வகையில் உங்கள் உடன் பிறந்தவர்களான இரத்த பந்த உறவுகள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும்? உதாரணத்திற்கு ஒரு அண்ணனிடம் தங்கை எதிர்பார்ப்பது குறைந்தபட்ச அன்பு தான். நல்ல நாள், விசேஷத்திலாவது அண்ணன் நம்மிடம் பேசி விட மாட்டானா? நன்றாக இருக்கிறாயா? என்று ஒரு வார்த்தை கேட்டு விட மாட்டானா? என்று ஏங்குபவர்கள் ஏராளமானோர் இந்நாட்டில் உண்டு.

இன்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்பவர்கள், பெரும்பாலும் நாளை ஏதாவது ஒன்று என்றால் யாரிடம் போய் அந்த குழந்தை நிற்கும்? என்பதைத் தான் யோசிக்கிறார்கள். படிக்க வைக்க வேண்டுமே! திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே! பணம் வேண்டுமே! என்பதை விட நல்லது கெட்டதற்கு பங்கு கொள்ள ஒரு உறவு வேண்டுமே என்று தான் இன்று பலரும் சிந்திக்கும் விஷயமாகும். அப்படிப்பட்ட ஒரு அற்புத உறவு தான் சகோதரத்துவம் என்பது.

- Advertisement -

குடும்பத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்து வைப்பதோடு சரி, அதன் பிறகு அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு. அவர்கள் சிந்தும் கண்ணீரும், அவர்களுடைய ஏக்கமும் உங்களுடைய குலத்தைப் பாதிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? குல வதுவாக இருக்கும் குடும்பத்து பெண்களை முதலில் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். இதற்கு நீங்கள் பெரிதாக எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை! ஒரு நல்ல நாள் விசேஷம் என்றால் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களை குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு, வஸ்திர தானம் செய்து பாருங்கள். புது புடவை, மாப்பிள்ளைக்கு புது வேஷ்டி, சட்டை என்று வாங்கி கொடுத்தால் போதும் அவர்கள் மனம் மகிழ்ந்து, நெகிழ்ந்து போவார்கள். இதனால் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியானது பெருகத் தொடங்கும்.

பெண் பிள்ளைகள் இல்லாத வீட்டில் ஆண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாய், தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து வரலாம். உயிருடன் இருக்கும் தாய், தந்தையருக்கு தேவையானதை செய்வது அல்லது இறந்து போனவர்களுக்கு பித்ரு கடன் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக செய்வது மிகவும் நன்மைகளை கொடுக்கும். மேலும் குலதெய்வ கோவிலுக்கு மாதம் ஒரு முறையாவது குடும்பத்துடன் சென்று வருவது குலத்தை செழிக்கச் செய்யும்.

- Advertisement -