வேண்டுதல் வைத்து தானம் கொடுக்க போகிறீர்களா? அப்போது முதலில் எவற்றையெல்லாம் தானம் கொடுக்க கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்

dhanam
- Advertisement -

நமக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்றால் கடவுளிடம் மன்றாடி எனக்கு இந்த இந்தக் காரியம் நடக்க வேண்டும் அதற்கு நான் இதனை தானமாக கொடுக்கிறேன் என்று வேண்டுதல் வைத்து, அதனை நிறைவேற்றுவது என்பது காலம் காலமாக நாம் செய்துவரும் ஒரு வழக்கமாகும். அவ்வாறு தானமாக கொடுக்கும் ஒவ்வொரு பொருளுக்கென்றும் தனிப்பட்ட பலன்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சில பொருட்களைத் தானமாக கொடுப்பதை நாம் தவிர்க்க வேண்டும். அவ்வாறு இதுவரை நமக்கு தெரியாமல் நாம் செய்த தவறையும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதை அறிந்த பிறகு அதனைத் தவிர்த்துக் கொள்வது என்பது நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும். வாருங்கள் எந்த பொருட்களையெல்லாம் தானம் கொடுக்க கூடாதுஎன்பததை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

pray

முதலாவதாக துடைப்பத்தை தானமாக கொடுக்க கூடாது நமது வீட்டில் பயன்படுத்தக்கூடிய பழைய துடைப்பமாக இருந்தாலும் சரி, புதியதாக இருந்தாலும் சரி நமது உறவினர்களானாலும் அவர்களுக்கும் கூட அதனை தானமாகக் கொடுப்பது என்பது கூடாது. துடைப்பத்தை மகாலட்சுமி என்று கூறுவர். எனவே அவற்றை தானமாக கொடுப்பது நமது வீட்டின் மகாலட்சுமியையே தானமாக கொடுப்பதற்கு சமம் ஆகும்.

- Advertisement -

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று கூறுவோம். அவ்வாறு தானம் கொடுப்பதாக இருந்தால் புதியஅன்னதத்தை கொடுக்கலாமே தவிர பழைய சாதத்தை எப்பொழுதும் மற்றவருக்கு தானமாக கொடுக்க கூடாது. இவ்வாறு செய்வதால் நமது வீட்டில் பண கஷ்டம் அதிகரிக்கும். இருக்கின்ற நிலைமையை விட மோசமான நிலைக்குச் சென்றுவிடுவோம்.

arisi-kanji

அடுத்ததாக வீட்டில் இருக்கும் கூர்மையான பொருட்களை தானம் செய்தல் கூடாது. அதாவது கத்தி, அறுவாமனை, கத்தரிக்கோல், ஊசி போன்றவற்றை தானமாகக் கொடுக்க கூடாது. அதனை நாம் தானமாக கொடுத்தோம் என்றால் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம்.

- Advertisement -

இப்பொழுதெல்லாம் ஏதாவது பண்டிகை, பூஜை, திருமண நிகழ்ச்சி போன்றவற்றில் பரிசுப் பொருளாக ஏதாவது ஒரு பிளாஸ்டிக் டப்பாவை கொடுக்கிறார்கள். ஆனால் இவ்வாறு செய்வதால் துரதிர்ஷ்டம்தான் உண்டாகிறது. மக்காத பிளாஸ்டிக் பொருள்களை எப்போதும் பிறருக்கு தானமாக கொடுக்க கூடாது. இதனால் நமது முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுகிறது.

plastic-boxes

நமது வீட்டின் பூஜை அறையில் நாம் பயன்படுத்தக்கூடிய பூஜை பாத்திரங்கள், சுவாமி படங்கள், சுவாமி சிலைகள் அல்லது பூஜை சம்பந்தமான எந்த ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் எதனையும் பிறருக்கு தானமாக கொடுக்க கூடாது. இவ்வாறு இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் நமது வீட்டின் அதிர்ஷ்டமும் அவற்றுடன் சேர்ந்து சென்றுவிடும். நமக்கு மிகவும் நெருங்கியவர்களாக இருந்தாலும் அவர்கள் ஆசைப்பட்டு கேட்டாலும் கண்டிப்பாக இவ்வாறான பொருட்களை தானமாக கொடுப்பது என்பது நிச்சயம் கூடாது. இவை பழையதானாலும் அதனை கோவிலில் சென்று தான் வைக்க வேண்டும்.

poojai

அவ்வாறு யாருக்காவது துணிகளை தானமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் புதிய துணிகளை கொடுக்க வேண்டும். கிழிந்த துணிகளை தானமாக கொடுக்க கூடாது. இவ்வாறு செய்வதால் தேவையில்லாத பிரச்சனைகள் தான் ஏற்படும். புண்ணியத்திற்கும், மன நிம்மதிக்காகவும் செய்யக்கூடிய தானத்தில் இவ்வாறு குறைகள் இருந்தது என்றால் நமக்கு பாவம் மட்டுமே வந்து சேரும்.

- Advertisement -