தனுசு ராசிக்காரர்களுக்கான பொது பரிகாரங்கள்

dhanusu-rasi

பழங்காலங்களில் போர்களில் எதிரிகளை தொலைவிலிருந்தே வீழ்த்துவதற்கு சிறந்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது வில் மற்றும் அம்பாகும். இதில் வில்லை வடமொழியில் “தனுசு” என்று குறிப்பிடுவார்கள். இந்த வில்லை போலவே எதிராளிகளை தங்களின் சிறந்த மதிநுட்பத்தால் தோற்கச் செய்யும் தந்திரம் தெரிந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள். இந்த தனுசு ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் பல நன்மைகளையும், பொருளாதார ஏற்றங்களையும் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் எவை என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

guru-bagawan

தனுசு ராசி நவகிரகங்களில் முழுமையான சுப கிரகமான குரு பகவானின் அதிகத்திற்குட்பட்ட ராசியாக இருக்கிறது. தனுசு ராசிகாரர்கள் உறுதியான மனம் கொண்டவர்கள். எதிலும் கடின உழைப்பையும், விடா முயற்சியையும் கொடுக்க கூடியவர்கள் ஆவர். தனுசு ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான பல நன்மைகளை பெற கீழ்கண்ட பரிகாரங்களை தங்களின் வாழ்நாளில் கடைபிடித்து வர செல்வ வளம் பெருகும்.

குரு பகவானின்வழிபாட்டிற்குரிய வியாழக்கிழமை தினங்களில் விரதம் இருந்து குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள், இனிப்புகள் நிவேதித்து வழிபட்டு வருவதால் தனுசு ராசியினரின் வாழ்வில் பல நல்ல மாறுதல்கள் ஏற்படுவதை காணலாம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து கொள்வதாலும், எப்போதும் மஞ்சள் நிற கைக்குட்டை உங்களுடன் வைத்து கொள்வதாலும் நேர்மறையான சக்திகள் உங்களிடம் அதிகம் சேரும். வருடம் ஒருமுறை ஹரித்துவார் நகரத்திற்கு சென்று, கங்கையில் நீராடி இறைவனை வழிபட்டு வர உங்களையும் மற்றும் உங்கள் குடும்பத்தையும் பீடித்திருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

guru

கோயிலுக்கு செல்லும் முன்பு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு உங்களால் முடிந்த தொகையை யாசகம் இடலாம். கோயிலில் வழிபட்ட பின்பு வந்து யாசகம் தருவதை தவிர்க்க வேண்டும். வியாழக்கிழமைகளில் உங்கள் வீடுகளில் அசைவ உணவுகள் செய்வதையோ, வாங்கி உண்பதையோ தவிர்க்க வேண்டும். உங்களின் தந்தைக்கான பணிவிடைகளை செய்து வந்தாலே உங்களின் வாழ்வில் நன்மையான மாற்றங்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dhanusu rasi pariharam in Tamil. It is also called as Dhanusu rasi in Tamil or Jothida rasi pariharam in Tamil or Rasi pariharam in Tamil.