புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள்

punrapoosam-guru

ஜோதிடத்தில் ஒருவருக்கான பலன்களை கணிக்க நாம் அவர் பிறந்த ராசியை எவ்வளவு முக்கியமாக கருதுகிறோமோ, அதே அளவிற்கு ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். 27 நட்சத்திரங்களில் குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாக “புனர்பூசம்” நட்சத்திரம் வருகிறது. புனர்பூசம் நட்சத்திரம் குறித்தும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் மேன்மையடைய செய்ய வேண்டிய பரிகாரகங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

guru bagwan

27 நட்சத்திரங்களின் வரிசையில் 7 ஆவது நட்சத்திரமாக வருவது புனர்பூசம் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக முழுமையான சுபகிரகமான குரு பகவான் இருக்கிறார். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குருவின் பூரண அருளை பெற்றவர்கள் என்பதால் அனைத்து விடயங்களை பற்றிய ஞானம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்வில் அதிகம் செல்வம் பெறவும், அதிர்ஷ்டங்கள் பெறவும் கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதியாக குரு பகவான் இருப்பதால் வியாழக்கிழமைகளில் குரு பகவான் சந்நிதிக்கு சென்று மஞ்சள் நிற பூக்களை குரு பகவானுக்கு சமர்ப்பித்து, 27 வெள்ளை கொண்டைக்கடலை கோர்த்த மாலையை சாற்றி, இரண்டு நெய்தீபங்கள் ஏற்றி குரு பகவானுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட வேண்டும். வருடமொருமுறை ஆலங்குடி குரு பகவான் ஆலயம் சென்று குரு பகவானை வழிபட வேண்டும். இந்த பூஜை வழிபாட்டு முறையை புனர்பூச நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களில் பிறந்தவர்களும் மேற்கொள்ளலாம். மேலும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற உடைகளை அணிந்து கொள்வது குரு பகவானின் அருளை உங்களுக்கு கிடைக்கச் செய்யும்.

guru

புனர்பூச நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுனம் ராசியிலும், நான்காம் பாதம் கடக ராசியிலும் வருகிறது. முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்கள் புதன் கிழமைகளில் விநாயகரை விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் ஒரு பிராமண பெண்ணுக்கு ஒரு புதன் கிழமையன்று பச்சை பயறு மற்றும் பச்சை நிற புது புடவை தானமளிப்பது உங்களின் நட்சத்திர பாத தோஷங்களை போக்கும். புனர்பூச நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பெண் பூனைகள் அருந்துவதற்கு பால் கொடுத்து வருவதும் சிறந்த பரிகாரம் ஆகும்.

2019 ஆம் ஆண்டிற்கான ராசிபலன்கள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே:
துலாம் ராசியினருக்கான பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Punarpoosam nakshatra pariharam in Tamil. It is also called Guru bhagavan natchathirangal in Tamil or Punarpoosam natchathiram in Tamil or Punarpoosam nakshatra adhipathi in Tamil or 
Punarpoosam natchathiram in Tamil or Punarpoosam natchathira palangal.