தசாங்கத்தை உங்கள் வீட்டில் ஏற்றுவதற்கு முன்பு ஒரு முறை இதை பாருங்க. பிறகு தசாங்கத்தை வாங்கி வந்து அப்படியே பூஜை அறையில், வைத்து ஏற்றவே மாட்டீங்க.

- Advertisement -

தசாங்கம் வாசம் நிறைந்த ஒரு பொருள். இந்த நறுமணம் நிறைந்த தசாங்கத்தை பூஜை நேரங்களில் வீட்டில் ஏற்றி வைத்தால் தெய்வீக நறுமணம் வீடு முழுவதும் நிறைவாக இருக்கும். இந்த தசாங்கத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலான வாசம் நிறைந்த தூபமாக எப்படி மாற்றுவது என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக. இப்படி தசாங்கத்தை உங்கள் வீட்டில் ஏற்றி வைத்தால், உங்க வீடு கோவிலாக மாறும். அந்த நறுமணம் வீட்டில் ஐஸ்வர்யத்தையும் லட்சுமி கடாட்சத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

தசாங்கத்தை வீட்டில் எப்படி ஏற்றுவது?
தாசங்கம் தூளாகத்தான் கடைகளில் நமக்கு கிடைக்கும் அல்லவா. சில பேர் இதை வாங்கி வீட்டில் ஏற்றியும் இருப்பீர்கள். சில சமயம் அந்த தசாங்கம் சரியாக எரிந்து புகை வராது. சில சமயம் அந்த தசாங்கம் பாதியிலேயே எரிந்து முடிந்து விடும். தசங்கத்தை ஏற்றி வைப்பதில் சில சிரமங்கள் இருக்கும். அந்த சிரமங்களை எல்லாம் சரி செய்யத்தான் இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு. வாங்கிய தசாங்கத்தை ஒரு டப்பாவில் கொட்டிக் கொள்ளுங்கள். வாங்கியதசாங்கம் லேசாக ஈரமாக இருந்தால், அதை கொஞ்சம் காய வைத்து டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளவும். ஈர தசாங்கம் கூட முழுமையாக நெருப்பு பிடித்து எரியாது. இந்த தசாங்கத்தோடு இன்னும் ஒரு சில பொருட்களை நாம் கலக்கப்போகின்றோம்.

- Advertisement -

ஜவ்வாது, கோரோசனை, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், இந்த நான்கு பொருட்களையும் தூளாக தசாங்கத்தோடு சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த தசாங்கத்தை அச்சில் போட வேண்டும். அவர்களே கோன் போல சிறிய அளவில் பிளாஸ்டிக்கில் அச்சு கொடுத்திருப்பார்கள்‌ அதன் உள்ளே நன்றாக அழுத்தம் கொடுத்து, தசாங்கத்தை போட்டு அந்த கோனை தலைகீழாக கவிழ்த்தால், ஷேப்பாக தசாங்கம் நமக்கு கிடைத்துவிடும்.

இப்படியும் செய்யலாம் தவறு கிடையாது. இருந்தாலும் சிறிய அளவில் பிளாஸ்டிக் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரசாங்கத்தை முழுமையாக எடுக்க வேண்டும். தசாங்கத்தை நன்றாக அழுத்தம் கொடுத்தால் ஸ்பூன் அச்சில் தசாங்கம் நமக்கு கிடைக்கும். அழுத்தம் கொடுத்து எடுத்த தசங்கத்தை ஸ்பூனை கவிழ்த்து அப்படியே ஒரு தூப காலில் வையுங்கள். இந்த தசாங்க பொடிக்கு மேலே ஒரு சிறிய கற்பூரத்தை வைத்து, ஏற்றி விடுங்கள்.

- Advertisement -

கற்பூரம் எரிந்து அந்த நெருப்பு தசாங்கத்தை பிடித்து புகை வரும் பாருங்கள். அந்த புகை வரும் போது உங்களுடைய வீடு முழுவதும் தசாங்கத்தின் நறுமணமும், இன்னும் நாம் இதில் சேர்த்து இருக்கும் பொருட்களுடைய நறுமணமும் வீடு முழுவதும் பரவி ஒரு மன நிம்மதியை கொடுக்கும். அடியில் இருக்கும் தசாங்கம் வரை முழுமையாக எரிந்து சாம்பலாகி புகையை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: முன்னவே இந்த ஐடியா எல்லாம் தெரிஞ்சி இருந்தால், நிறைய பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தி இருக்கலாம். கஷ்டப்பட்டு சுத்தம் செய்ய வேண்டிய வேலை இனி இல்லை.

உங்களுடைய வீட்டில் இதுநாள் வரை தசாங்கத்தை நீங்கள் ஏற்றி வைத்திருந்தாலும் சரி, அல்லது புதுசாக இப்போதுதான் இந்த பதிவை படித்துவிட்டு தசாங்கம் வாங்கி பூஜை அறையில் பயன்படுத்த போவதாக இருந்தாலும் சரி, மேல் செல்ல குறிப்பை மட்டும் ஒரு முறை பின்பற்றினால் உங்கள் வீடு வீடாக இருக்காது. நிச்சயம் கோவில் ஆகத்தான் இருக்கும். உங்களுக்கு இந்த எளிமையான வீட்டு குறிப்பு பிடித்திருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -