முன்னவே இந்த ஐடியா எல்லாம் தெரிஞ்சி இருந்தால், நிறைய பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தி இருக்கலாம். கஷ்டப்பட்டு சுத்தம் செய்ய வேண்டிய வேலை இனி இல்லை.

maavu
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு சமையலறையில் சமைப்பது ஒரு வேலை என்றால், சமைத்து முடித்த பின்பு அழுக்கான கேஸ் ஸ்டவ், சமையல் மேடை இவைகளை சுத்தம் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். அதே போல அழுக்கு படிந்த பாத்ரூமை சுத்தம் செய்வது இல்லத்தரசிகளுக்கு கஷ்டமான விஷயம்தான். அடித்து பிடித்து இரண்டு மணி நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் சமைக்க முடியும். சமைத்து முடித்த பின்பு இந்த வீட்டை சுத்தமாக பராமரிப்பது தான் பெரிய வேலை. அதற்காகும் நேரத்தை யாராலும் கணக்கிட முடியாது. சரி, இந்த வேலையை சுலபமாக்கவும் இன்று நாம் ஒரு பயனுள்ள குறிப்பை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள லிக்விட் தயாரிக்கும் முறை:
இந்த லிக்விடை தயார் செய்ய நமக்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள் புளித்த இட்லி மாவு. டப்பாவில் கடைசியாக ஆங்காங்கே ஒட்டி இருக்கும் அல்லவா, கழுவுவதற்காக போட்டிருப்பீர்கள். மாவு மொத்தமும் தீர்ந்திருக்கும். ஆனால் மாவு டப்பா ஓரங்களில் மட்டும் புளித்த மாவு அப்படியே ஒட்டி இருக்கும். அதை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த தண்ணீரை அப்படியே தெளிய விடுங்கள். அடியில் மாவு கொரகொரப்பாக நிற்கும். மேலே அந்த தண்ணீர் மட்டும் வெள்ளை நிறத்தில் பால் போல தெளிந்து வந்திருக்கும். அந்த தண்ணீர் மட்டும் நமக்கு தேவை. அந்த தண்ணீரை அப்படியே மேலோடு தெளிவாக வடிகட்டி மற்றொரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரோடு, 1 டேபிள் ஸ்பூன் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு, கம்ஃபோர்ட் 1 மூடி ஊற்றி நன்றாக கலந்தால் சூப்பரான கிளீனிங் சொல்யூஷன் தயார்.

இந்த சொல்யூஷனை பயன்படுத்தி அழுக்கு படிந்த ஸ்டவ்வை ஒரு நிமிடத்தில் துடைத்து விடலாம். இந்த லிக்விடை ஒரு வாட்டர் கேனில் ஊற்றி, அதன் மேலே ஓட்டை போட்டு ஸ்ப்ரே பாட்டில் போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிசுபிசுப்பான ஸ்டவ்வுக்கு மேலே இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து விடுங்கள். சமையல் மேடை, திண்ணை டைல்ஸ் எல்லா இடங்களிலும் இந்த தண்ணீரை ஸ்பிரே செய்துவிட்டு, ஒரு ஈர துணியை வைத்து துடைத்து விட வேண்டும். அவ்வளவு தான். எண்ணெய் பிசுக்கு கறை எல்லாம் சுலபமாக நீங்கிவிடும்.

- Advertisement -

இதை வைத்து அழுக்கு படிந்த முகம் பார்க்கும் கண்ணாடி, பிரிட்ஜுக்கு வெளி பக்கத்தில் இருக்கும் பிசுபிசுப்பு இவைகளை கூட நாம் சுத்தம் செய்து கொள்ளலாம். லேசாக இந்த லிக்விடை ஒரு துணியில் ஸ்பிரே செய்து அந்த துணியை வைத்து முகம் பார்க்கும் கண்ணாடி, பிரிட்ஜ் டோர் எல்லாவற்றையும் துடைத்துப் பாருங்கள். உங்களுக்கே தெரியும். ஜன்னல் கண்ணாடியை துடைக்கவும் இதை பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: அட! இது கூடவா தெரியமா இத்தனை நாள் இருந்தோமன்னு நீங்களே நினைப்பீங்க. ஆமாங்க இதுவரை இல்லத்தரசிகளுக்கு தெரியாத பல புதிய பயனுள்ள வீட்டு குறிப்புகள் இதோ உங்களுக்காக.

அடுத்தபடியாக காய்ந்தபடி ஈரம் இல்லாமல் இருக்கும் பாத்ரூம் டைல்ஸ், டாய்லெட்டுக்கு மேலே இந்த லிக்விடை நன்றாக ஸ்பிரே செய்து விட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து ஒரு பிரஷ் போட்டு அல்லது துடைப்பம் போட்டு பாத்ரூமில் சுத்தம் செய்தால் போதும். பத்தே நிமிடத்தில் கை நோகாமல் உங்கள் கழிவறை சுத்தமாகிவிடும். இது எளிமையான குறிப்பு தான். குப்பையில் தூக்கி போடும் ஒரு பொருளை வைத்து இந்த லிக்விடை நாம் தயார் செய்திருக்கின்றோம். இதனால் நமக்கு நிறைய காசு மிச்சம். நிறைய நேரம் கூட மிச்சமாகும். சுலபமாக எல்லா இடங்களையும் சுத்தம் செய்து விடுவீர்கள் அல்லவா. இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -