ஷிகார் தவான் : உங்கள் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் அபிநந்தன்

Abhinandan

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் புல்வாமா மாவட்டத்தில் ஏற்படுத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 44 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாமை முழுமையாக அழித்தது.

Pulwama

இதனை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பதட்டமான போர் சூழல் ஏற்பட்டது. பிறகு பாகிஸ்தான் நாட்டு விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவியதால் அதனை தடுக்க தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் போர் விமானத்தில் விரட்டி சென்று பிறகு, பாகிஸ்தான் நாடு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். இன்று அவரை பாகிஸ்தான் அரசு இந்தியாவிற்கு அனுப்ப உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

இதனால் அவரை வரவேற்கும் பணியில் உள்ளது இந்திய அரசு. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் அபிநந்தன் பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் : தைரியயமான உள்ளம் வீடு திரும்ப நான் மிகுந்த ஆவலோடு உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் ஆஷ் டேக்கில் வெல்கம் பேக் அபிநந்தன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய விமானி அபிநந்தன் வருகைக்காக அவரது குடும்பத்தினரும் அவரின் வருகைக்காக டெல்லி சென்று காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுவும் படிக்கலாமே :

இந்தியா டீம் : கடந்த 2 ஆண்டுகளில் கோலி சந்தித்த மிக மோசமான சாதனை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Dhawan tweet about abhinandan return