தீராத பண கஷ்டமும் சீக்கிரமே தீர இந்தத் திரியை கொண்டு தீபம் ஏற்றி பாருங்கள்! வீட்டில் இருக்கும் வறுமை என்ற இருள், இந்த தீப ஒளியில் காணாமல் போய்விடும்.

dheepam1

தீப வழிபாடு என்பது ஒரு வீட்டினுடைய இருளை நீக்கி, லட்சுமி கடாட்சத்தை கொண்டுவருவது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நிறைவான பக்தியோடு, தூய்மையான மனதில் இரு கைகளையும் ஏந்தி வாழ்வில் இருக்கும் இருள் நீங்க வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டாலும் நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல், அந்த ஆண்டவனின் செவிகளுக்கு கேட்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இருப்பினும் நாம் செய்த கர்ம வினை காண பலனை நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதும் விதி. என்ன செய்வது? சாஸ்திரமும் அதை தான் சொல்கிறது. கர்ம வினையால் உங்களுக்கு உண்டாகக்கூடிய கஷ்டங்களை, அந்த கஷ்டத்தின் தாக்கத்தினை, கஷ்டத்தினால் வரும் பாதிப்பினை, ஓரளவிற்கு குறைக்கக்கூடிய சக்தி இந்த பரிகாரங்களுக்கு உண்டு.

dheepam

ஆகவேதான் வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் சேர்த்தே சாஸ்திரம் சொல்கின்றது. தினசரி நாம் செய்யக்கூடிய தீப வழிபாட்டினை நமக்கு ஏற்றவாறு பரிகாரமாக நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். எப்படி என்றால் சாதாரணமாக நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுவது தீபவழிபாடு. நல்லெண்ணெய்க்கு பதில் நெய் ஊற்றி ஏற்றலாம் இது எல்லோரும் பின்பற்ற கூடிய விஷயம்தான்.

இருப்பினும் ஒவ்வொரு, தீபம் ஏற்றும் திரிக்கும், ஒரு தனித்தனி தன்மைகள் இருக்கத்தான் செய்கின்றது. அந்த வரிசையில் இன்று எந்தத் திரியை கொண்டு தீபம் ஏற்றினால் என்ன பலனை நம்மால் அடைய முடியும் என்பதை பற்றிதான் இன்று தெரிந்துகொள்ள போகின்றோம்.

panji-thiri

ஒரு வீடு சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷமாக சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றலாம். நல்லெண்ணைக்கு பதிலாக நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எதிரிகளின் தொல்லை நீங்க, திருமணத்தடை நீங்க, குடும்ப உறவுகளுக்கு இடையே சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க, வாழைத் தண்டு திரியை கொண்டு தீபம் ஏற்றுவது நல்ல பலனைக் கொடுக்கும். வாழைத்தண்டு திரி தீபத்திற்கும் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம் அல்லது நெய் ஊற்றி ஏற்றலாம்.

vazhaithandu-thiri

அடுத்ததாக வெள்ளெருக்கு திரி. ஒரு வீட்டில் தீராத பணக்கஷ்டத்துடனும், அந்தக் குடும்பம் வறுமையால் வாடி வதங்குகிறது என்றாலும், ஒரு ரூபாய் கூட வீட்டில் தங்குவதற்கு வாய்ப்பே இல்லை கஷ்டம் கஷ்டம், கஷ்டம் வறுமை! வறுமை! என்ற பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் வெள்ளெருக்கு திரி போட்டு வீட்டில் தீபம் ஏற்றுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

velleruku-kayaru

தாமரைத் தண்டு திரியில் தீபம் ஏற்றினால் பாவம் நீங்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்கள்ளது வீட்டில் தொடர்ந்து 48 நாட்கள் குழந்தை வரம் வேண்டும் என்ற வேண்டுதலை அம்பாளிடம் வைத்து 48 நாட்கள் தீபம் ஏற்றி பாருங்கள் சீக்கிரமே நல்ல செய்தி வந்து சேரும்.

thamarai-thandu-thiri

இவ்வாறாக மேல் சொல்லப்பட்டுள்ள திரிகளைப் போட்டு காமாட்சி அம்மன் விளக்கில் தீபம் ஏற்றலாம். காமாட்சியம்மன் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை மட்டும்தான் ஊற்றப்பட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். அதாவது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணை, தேங்காய் எண்ணெய் இப்படிப்பட்ட தீபங்கள் ஏற்ற வேண்டும் என்றால், ஒரு மண் அகல் விளக்கில் தான் தீபம் ஏற்ற வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் காமாட்சி அம்மன் விளக்கில் நல்லெண்ணெய் மற்றும் நெய்யைத் தவிர வேறு எதையும் ஊற்ற வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
1 கிராம் தங்கம் கூட வாங்க முடியவில்லையா? சனிக்கிழமையில் துளசியை இப்படி செய்யுங்கள், தங்க நகை குவியும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.