- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதெய்வ சக்தி அதிகரிக்க உதவும் பரிகாரம்

தெய்வ சக்தி அதிகரிக்க உதவும் பரிகாரம்

- Advertisement -

ஒரு வீட்டிற்கு நிலை வாசலும் நிலை வாசல் கதவும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இது இல்லாத வீடு இருக்காது. நிலைவாசல் மற்றும் நிலைவாசல் கதவின் வழியாக தான் நல்ல சக்தியாக இருந்தாலும் தீய சக்தியாக இருந்தாலும் வீட்டிற்குள் வரும். அப்படிப்பட்ட நிலை வாசலையும் நிலை வாசல் கதவையும் நாம் எந்த முறையில் பராமரித்தால் எதிர்மறை ஆற்றல்களான தீய சக்திகள் வீட்டிற்குள் வராமல் நேர்மறை ஆற்றலான தெய்வ சக்திகள் மட்டும் வீட்டிற்குள் வரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஜன்னல்கள் இல்லாத வீட்டை கூட நம்மால் பார்க்க முடியும். ஆனால் நிலைவாசலும் நிறைவாசல் கதவும் இல்லாத வீட்டை நம்மால் பார்க்க முடியாது. அதுதான் நாம் அந்த வீட்டிற்குள் செல்வதற்குரிய வழியாக திகழ்கிறது. இதே போல் தான் அனைத்து விதமான சக்திகளும் நம் வீட்டிற்குள் வருவதற்கு அந்த வழியை பயன்படுத்தும். அதனால் தான் அன்றைய காலம் தொட்டு நிலை வாசலையும் நிறைவாசல் கதவையும் நம்முடைய முன்னோர்கள் பல வழிகளில் பராமரித்து வந்தார்கள்.

- Advertisement -

தெய்வசக்தி வீட்டிற்குள் வருவதற்காக சில வழிமுறைகளை பின்பற்றியும் வந்தார்கள். காலப்போக்கில் அந்த வழிமுறைகள் மறைந்து விட்டது என்றாலும் இன்றளவும் சில பேர் அந்த வழிமுறைகளை பின்பற்றி தங்களுடைய வாழ்க்கையை சிறப்பான வாழ்க்கையாக மாற்றி இருக்கிறார்கள். இந்த நிலை வாசலிலும் நிலை வாசல் கதவிலும் அனைத்து விதமான தெய்வங்களும் குடியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

அதிலும் மிகவும் முக்கியமாக இருக்கும் தெய்வமாக திகழ்பவர் கஜலக்ஷ்மி தாயார். கஜலஷ்மி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் நாம் நிலை வாசலையும் நிலை வாசல் கதவையும் முறையாக பராமரிக்க வேண்டும். இன்றைய காலத்தில் பலரும் நிலை வாசலில் சுவாமி படங்களை ஸ்டிக்கராக ஒட்டி வைத்திருக்கிறார்கள். எந்தவித ஸ்டிக்கரையும் நிலை வாசல் கதவில் ஒட்டக்கூடாது. அதேபோல் நிலை வாசலில் மஞ்சள் குங்குமத்தை வைப்பதற்காக பெயிண்ட் அடித்து வைத்திருப்பார்கள். அதுவும் முற்றிலும் தவறான ஒன்று.

- Advertisement -

எந்தளவிற்கு நாம் மஞ்சளையும் குங்குமத்தையும் பயன்படுத்துகிறோமோ அந்த அளவு கஜலட்சுமி தாயாரின் அருள் என்பது நமக்கு கிடைக்கும். மேலும் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான ஒரு செயல் ஒன்று இருக்கிறது. அதை மட்டும் நாம் செய்தால் நம்முடைய வீட்டில் அனைத்து விதமான தெய்வங்களின் வருகையும் ஏற்படும். எந்தவித தீய சக்திகளும் வீட்டிற்குள் நுழையாது.

இதை நிலைவாசல் கதவின் முன்புறம் செய்யக்கூடாது. பின்புறம் தான் செய்ய வேண்டும். கண்டிப்பான முறையில் வாரத்திற்கு ஒரு முறையாவது நம்முடைய நிலை வாசலையும் நிலை வாசல் கதவையும் நாம் சுத்தமான துணியை வைத்து துடைப்போம். அந்த மாதிரி துடைத்து முடித்துவிட்டு சிறிது மஞ்சள், சிறிது குங்குமம், பச்சை கற்பூரம், ஜவ்வாது, அரகஜா போன்ற பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு பன்னீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு உங்களுடைய மோதிர விரலால் இந்த விழுதை எடுத்து நம்முடைய நிலை வாசல் கதவின் பின்புறம் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். பிறகு இந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு வலது புறமும் இடது புறமும் சுபம் லாபம் என்று எழுத வேண்டும். அதாவது முதலில் சுபம் வரவேண்டும். அடுத்ததாக ஸ்வஸ்திக் சின்னம் வர வேண்டும். அடுத்ததாக லாபம் வர வேண்டும். இதை பெரியதாக எழுத வேண்டாம். மிகவும் சிறியதாக எழுதினாலே போதும்.

இப்படி வாராவாரம் இந்த முறையில் மஞ்சளை தயார் செய்து நிலை வாசலின் பின்புறம் இப்படி எழுதும் பொழுது அனைத்து விதமான தெய்வங்களின் ஆகர்சனமும் நம் வீட்டில் ஏற்படும். எந்தவித தீய சக்திகளும் வீட்டிற்குள் நுழையாது.

இதையும் படிக்கலாமே: சஷ்டி திதி அன்று செய்ய வேண்டிய தானம்

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து அனைத்து தெய்வங்களின் ஆகர்ஷணத்தையும் நம் வீட்டில் வரவழைத்துக் கொள்வோம்.

சற்று முன்