முருகனுக்கு உரிய திதி என்றால் அது இந்த சஷ்டி திதி. மாதம் தோறும் தேய்பிறை சஷ்டி திதி, வளர்பிறை சஷ்டி திதி வரும். இன்று வளர்பிறை சஷ்டி திதி. இன்று மாலை முருகன் கோவிலில் இந்த தானத்தை செய்தாலும் சிறப்பான பலனை பெறுவீர்கள். தீராத நோய்நொடி தீர, மருத்துவ செலவை குறைக்க, ஆரோக்கியமாக வாழ, நிம்மதியாக வாழ, செய்ய வேண்டிய முருகர் வழிபாட்டை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
சஷ்டி திதி முருகன் வழிபாடு
சுத்தமான பசு சான விபூதி தானம். நிறைய பூஜை ஜாமான்கள் விற்கும் கடைகளில் இந்த விபூதி கிடைக்கும். கொஞ்சம் விலை கூடுதலாக இருந்தாலும், அதை வாங்கிக் கொள்ளுங்கள். பசு சானத்தால் செய்யப்பட்ட விபூதியை சஷ்டி திதியில் முருகன் கோவிலுக்கு வாங்கி தானம் கொடுக்க வேண்டும்.
இந்த விபூதியை அவர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (இந்த விபூதி முருகர் அபிஷேகத்திற்கு என்று சொல்லி அர்ச்சகர் இடம் கொடுக்க வேண்டும்.) அபிஷேகம் செய்த விபூதியிலிருந்து கொஞ்சமாக கேட்டு நீங்க வாங்கிக்கோங்க. அதை கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். தினமும் வேல்மாறல் பதிகத்தை படித்து இந்த நீரை நெற்றியில் இட்டு வர தீராத நோய்நொடி விலகும்.
வேல்மாறல் படிப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை, வேல்மாறல் படிக்கவும் தெரியாது. என்ன செய்வது. இப்போது இந்த வேல் மாறலை காதால் கேட்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. எல்லோர் கையிலும் கைபேசி இருக்கிறது. அதில் இன்டர்நெட் வசதியும் இருக்கிறது. பாடலை ஒலிக்கச் செய்யுங்கள். முருகனை வழிபாடு செய்யுங்கள்.
உங்கள் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணருவீர்கள். 10 நாள் இந்த வேல் மாறல் பாடலை காதில் கேட்க கேட்க தானாக உங்களுடைய வாய் இந்த பாடலை பாடத் தொடங்கி விடும். சஷ்டி திதி அன்று மட்டும்தான் வேல் வழிபாடு செய்ய வேண்டும் என்பது கிடையாது.
தினமும் வேல்மாறலை ஒலிக்க விட்டு முருகப்பெருமானை நினைத்து முருகா எனக்கு ஆரோக்கியமான வாழ்வை கொடு என்று மனம் உருகி வேண்டுதல் வையுங்கள். எப்பேர்ப்பட்ட நோய் நொடி பிரச்சனையாக இருந்தாலும், அதை தீர்த்து வைக்கும் அதிசயத்தை செய்யக்கூடிய ஒரே தெய்வம் இந்த முருகப்பெருமான்தான்.
முருகன் கையில் இருக்கும் வேலாயுதத்திற்கு அத்தனை சக்தி இருக்கிறது. இது முருகன் பக்தர்களுக்கு தெரியும். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு. முருக பக்தர்களுக்காக முருகனின் அருளை பெறுவதற்காக வேல் மாறலில் இருந்து முதல் பதிகம் இதோ உங்களுக்காக.
வேல்மாறல்
பருத்த முலை சிறுத்த இடை
வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ்
மறச்சிறுமி விழிக்கு நிகராகும்
இதையும் படிக்கலாமே: சுப காரிய தடை விலக குலதெய்வ வழிபாடு
இன்றைய சஷ்டி திதியில் முருகப்பெருமானின் இந்த நான்கு வரிகளைப் படித்து கோடான கோடி புண்ணியங்களை பெற்ற முருக பக்தர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.