வெற்றியின் விளிம்பில் அரை சதம் அடித்ததை மறந்த தோனி. நியாபக படுத்திய தினேஷ் கார்த்திக் – வீடியோ

dhoni karthick

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி 15ஆம் தேதி நடந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலிய அணி பலமாக வெற்றி . இந்திய அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடரின் முடிவினை காண முடியும் என்பதால் வெற்றி பெரும் நம்பிக்கையோடு களமிறங்கியது.

rohit-koli

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 298 ரன்களை குவித்து 299 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பெரிய இலக்கினை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோஹித் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.பிறகு சேசிங் கிங் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதமடித்தார். 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் வெளியேறினார்.

பிறகு தோனி மற்றும் கார்த்திக் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். தோனி கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் தனது ஸ்டைலில் சிக்ஸ் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அவர் அப்போது அரை சதமும் கடந்தார். ஆனால், அது அவருக்கு தெரியவில்லை வெற்றியை மட்டும் எதிர்நோக்கி இருந்தார். எனவே, கார்த்திக் அவருக்கு அதை நியாபகப்படுத்தினார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. அந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் போட்டி விறுவிறுப்பான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியின் அடுத்த காதல் ஜோடி. என் காதலி இவர்தான் புகைப்படத்தை வெளியிட்ட – ரிஷப் பண்ட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்