இந்திய அணியின் அடுத்த காதல் ஜோடி. என் காதலி இவர்தான் புகைப்படத்தை வெளியிட்ட – ரிஷப் பண்ட்

rishabh

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரினை இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. நாளை கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. அந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.

rohith-and-ms

இந்திய அணி வீரர்களின் காதல் என்பது எப்போதும் வெளிப்படையான ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக தோனி,கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் வெளிப்படையாக தங்களது காதலை தெரிவித்து திருமணம் புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணி வீரரின் புதிய காதல் ஜோடி வெளியாகியுள்ளது. இந்தமுறை இந்திய அணியின் இளம் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது காதலியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் நான் உன்னால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே உன்னையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புகின்றேன் இஷா என தனது காதலியின் பெயரையும் வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக அந்த புகைப்படம் :

pant

இந்திய அணியின் தோனிக்கு பிறகு அவரது இடத்தினை சரியாக பிடிக்க காத்திருக்கும் வீரர் இவரே. மேலும், இந்த உலகக்கோப்பை போட்டிக்கே அவரை அணியில் இணைக்க வேண்டும் என்று பல கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவரது பேட்டிங் மற்றும் செயல்பாடு அந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

ஆஸி அணிக்கு எதிரான 2வது போட்டியின் போது கலீல் அஹமதை கெட்டவார்த்தையில் திட்டிய தோனி – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்