எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தோனி என்னை எப்போதும் இந்த பட்டப்பெயர் வைத்தே அழைப்பார் – சாஹல் ஜாலியான பேட்டி

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் சாஹல். அஷ்வினுக்கு ஒருநாள் போட்டியில் இடம் கொடுக்கப்படாததால் அந்த இடத்தினை பிடித்தவர் சாஹல். இவர் ஐ.பி.எல். போட்டிகளை பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் இவரது திறமையினை இவர் நிரூபிக்க இவரை தேசிய அணியில் இணைத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம்.

chahal

அடுத்து பல போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்ற ஆரம்பித்து அணியின் நிரந்தர சுழற்பந்து வீச்சாளராக மாறினார். ஒருநாள் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு பதிலாக சாஹல் மட்டும் குல்தீப் ஆகியோர் தொடர்ந்து அணியில் இடம் பிடித்தனர். இவர்களது கூட்டணி சிறப்பாக செயல்பட இவர்களே தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்து ஆடிவருகின்றனர்.

நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சாஹல் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அந்த நிருபர் அணியில் உங்களது பட்டப்பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சாஹல் நிறைய இருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த மாதிரி அழைப்பார்கள்.

kuldeep

ஆனால், தோனி என்னை எப்போதும் “த்தில்லி” அதாவது தமிழில் “வத்திப்பெட்டி” என்றுதான் அழைப்பார். அவர் அப்படி கூப்பிடுவது எனக்கு பிடிக்காது இருப்பினும், அப்படியே இதுவரை அழைத்து வருகிறார். சிறிய அளவில் இருக்கும் நீ பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறாய் எனவே, நான் உன்னை வத்திப்பெட்டி என்று அழைக்கிறேன் என்றும் என்னிடம் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக வெளியில் தலைகாட்டிய பாண்டியா – புகைப்படம் உள்ளே

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்