இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக வெளியில் தலைகாட்டிய பாண்டியா – புகைப்படம் உள்ளே

hardik

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியை சேர்ந்த ஹார்டிக் பாண்டியா பெண்களை குறித்த தவறான கருத்தினை கூறியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

KL and HP

மேலும், ஆஸ்திரேலிய சென்றிருந்த இந்திய அணி பயணத்தையும் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயணத்திலும் விளையாட தடை செய்து நாடு திரும்ப சொன்னது இந்திய கிரிக்கெட் வாரியம். உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் அவரது இடம் கேள்விக் குறியாகியுள்ளது.

இந்தியா திரும்பியதிலிருந்து பாண்டியா வெளியில் தலை காட்டாமல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை உன்னிப்பாக பார்த்தார். இந்தியா திரும்பியதிலிருந்து வெளியிலும் வரவில்லை. மீடியா போன்ற எவற்றிற்கும் எந்த பேட்டியும் இதுவரை அவர் அளிக்கவில்லை

pandya 1

இந்நிலையில் அவர் இன்று மதியம் மும்பை சத்ரபதி சிவாஜி ஏர்போர்ட்-க்கு அவரது அண்ணன் குருனால் பாண்டியாவோடு வந்திருந்தார். ஷார்ட்ஸ் மற்றும் பனியன் போட்டபடி நடந்துசென்றார். ஆனால், குருனால் பாண்டியா பயிற்சி போட்டிக்கு செல்வது போல விளையாட்டு உடை அணிந்திருந்தார்.

இதையும் படிக்கலாமே :

14ஆண்டுகள் கழித்து நான் இப்படியெல்லாம் சொல்லகூடாது -தொடர்நாயகன் விருதினை பெற்ற தோனி பேட்டி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்