டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்த ரோஹித். அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்த ரோஹித்

Team

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று நடக்கவுள்ளது.

Krunal

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. டாசில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் வென்றார். டாஸை வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார் ரோஹித் பிட்சின் தன்மை காரணமாக இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றத்தை அவர் எடுத்துள்ளதாகவும் அதன்படி சாஹல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குலதீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை இந்த போட்டியில் நாங்கள் சேசிங் செய்ய விரும்புகிறோம்.

Kuldeep

இந்த போட்டியில் வென்று தொடரை நிச்சயம் வெல்வோம் என்று கூறினார் ரோஹித் சர்மா. அதன்படி நியூசிலாந்து அணியினர் களமிறங்க தயாராகி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

பி.பி.எல் : பந்து தாக்கியதால் அழுத சிறுவன். நேராக களத்திலிருந்து வெளியேறி சிறுவனுக்கு பவுலர் அளித்த பரிசு – நெகிழ்ந்த ரசிகர்கள் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்