இந்திய அணியின் சிறந்த கேப்டன் தோனி தான் – பேட் கம்மின்ஸ் புகழாரம்

cummins

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை (12-01-2019) தொடங்கவுள்ளது. இந்நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடாத இந்திய அணி வீரர் மஹேந்திர சிங் தோனி இந்திய அணியில் இணைந்து விளையாட உள்ளார்.

yuvi

டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதால் ஒருநாள் தொடரை வெல்லும் முன்னைப்புடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வீகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவரிடம் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் இன்று கேள்வி கேட்கப்பட்டது.

பேட் கம்மின்ஸ் பதில் : இந்திய அணி டெஸ்ட் தொடரை எங்களிடம் இருந்து பறித்தது. உண்மையில் இந்திய அணி எங்களை வீழ்த்தும் அளவிற்கு பலமான அணியாகவே நாங்கள் கருதுகிறோம்.அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும், இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்று நான் நிச்சயம் முன்னாள் கேப்டன் தோனியையே கூறுவேன் இப்படி கூறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

dhoni

ஏனெனில், இந்திய அணிக்காக தோனி 50ஓவர் உலகக்கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை தொடர் மற்றும் பல்வேறு டெஸ்ட் தொடர்கள், சாம்பியன்ஸ் டிராபி போன்ற பல கோப்பைகளை அவர் இந்திய அணிக்கு பெற்று தந்து இருக்கிறார். ஆனால், அவர் வெற்றிக்கு பிறகு கொண்டு செல்வது அந்த வெற்றியின் நியாபகமாக ஒரு ஸ்டம்ப் மட்டும்தான் இத்தனை அனைவரும் கவனித்து இருக்க வாய்ப்புண்டு, எனவே நிச்சயம் தோனிதான் இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்று கம்மின்ஸ் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரே வாய்ப்பு – ரோஹித்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்